மருத்துவ கட்டுரைகள் Archive

புற்றுநோய் தவிர்க்கும் வழிமுறைகள்!

செல்களின் கூட்டமைப்பில் உருவானதே மனித உடல். நவரசங்களையும் எண் சுவைகளையும், ஆயற் கலைகளையும் அனுமதிப்பது செல்கள். இந்தக் கூட்டமைப்பில் சிக்கல் இல்லாதவரைதான் ஊரை அடித்து உலையில் போடுவதும், ஏறி மிதித்து முன்னேறிச் செல்வதெல்லாம் நிகழும். உடலில் உருவாகும் செல்களுக்கு பிறப்பு, இறப்பு என வளர்ச்சியின் காலகட்டங்கள் இருக்கின்றன. அது தவறும்போது நோய் ஏற்படுகிறது. அதிலும் பல ஆண்டுகளாக மனித உயிர்களை காவு ...Read More

இதயத்தை இதமாக்கும் 10 வழிகள்!

தாயின் வயிற்றில் கரு உருவாகி, நான்கு வாரத்தில் தொடங்குகிறது முதல் இதயத் துடிப்பு. அன்று முதல் மனிதன் இறக்கும் வரை நிற்காமல் சதா சர்வ காலமும் துடித்துக்கொண்டிருக்கிறது இதயம். இதன் நான்கு அறைகள், வால்வுகள் மற்றும் ரத்த நாளங்களின் செயல்பாடு அளப்பரியது. உடல் முழுவதும் ரத்தத்தை அழுத்திச் செலுத்தி, பிராணவாயுவைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இதய அறுவைசிகிச்சையில் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ...Read More

பிறப்புறுப்புகளில் ஏன் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது?

பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள். ஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. ...Read More

பன்றிக்காய்ச்சல் ஏன்றால் என்ன?

பன்றிக்காய்ச்ல் என்பது (H1N1) எனப்படும் ஓர் இன்புளுவென்சா வைரசால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். இன்புளுவென்சா (Influenza) என்பது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும். இது மனிதரை மட்டுமன்றி பறவைகளையும் பன்றி போன்ற விலங்குகளையும் தாக்குகின்றது. இது இன்று நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதரைத் தாக்கி வருகின்றது. இன்புளுவென்சாவைரசில் A, B, C என மூன்று வகையுள்ளன. இவற்றுள் இன்புளுவென்சா ...Read More

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டது ஏன்?

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா?” ...Read More

பிறவி குணாதிசயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வினோதமான செயல்பாடுகள்!!!

உலகில் உள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் தனிப்பட்ட ஒரு சில பிறவி குணாதிசயங்கள் இருக்கும். அவற்றை என்ன செய்தாலும் மாற்ற இயலாது. நாம் வளரும் போது நம்மோடு சேரும் குணாதிசயங்களை கூட மாற்றிவிடலாம். ஆனால், நமது பிறவியோடு வரும் குணாதிசயங்கள் மரபணுவோடு தொடர்பு உடையவைகள், அவற்றை மாற்றுவது அவ்வளவு எளித்தல்ல. ஆனால், ஒரு சில விஷயங்கள் உங்களுக்கு நேரிடும் போது, அந்த ...Read More

உணவு கட்டுப்பாடே சர்க்கரைக்கு மருந்து!

பரபரப்பாக மாறிவிட்ட, தற்போதைய வாழ்க்கை முறையில், நாம் உணவு விஷயத்தை கருத்தில் கொள்வதில்லை. சூழ்நிலைக்கேற்ப பல்வேறு விதமான உணவுப்பொருட்களை உட்கொள்கிறோம். இதனால், நம் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இப்படி ஏனோ, தானோவென்று நம் உணவு பழக்க வழக்கம் இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் ஆதிக்கம் அதிகரித்து விடுகிறது; ...Read More

குழந்தையின்மை பிரச்சனைக்கு ஏற்ற சிகிச்சை முறை அவசியம்

குறைபாட்டுக்கு ஏற்ற சிகிச்சை முறையை மேற்கொண்டால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம். குழந்தையின்மை பிரச்சனைக்கு ஏற்ற சிகிச்சை முறை அவசியம்* குழந்தைப் பேறை உருவாக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் வருமுன் காப்பதே நல்லது. * பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முக்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளலாம். மது, போதைப் பழக்கத்தை ஆண்கள் கைவிட வேண்டும். * பாலியல் ...Read More

சர்க்கரை நோய்: தவறுகளும் உண்மைகளும்

‘பிரபலமான’ வியாதியாக விளங்கும் சர்க்கரை நோய் குறித்த தவறான நம்பிக்கைகள் என்ன? அவற்றின் நிஜம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்… சர்க்கரை நோய்: தவறுகளும் உண்மைகளும்பொதுவாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பலரிடமும் பல தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. இன்று ‘பிரபலமான’ வியாதியாக விளங்கும் சர்க்கரை நோய் குறித்த தவறான நம்பிக்கைகள் என்ன? அவற்றின் நிஜம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்… ...Read More

பெரும் பாடுபடுத்தும் “சீனி வியாதி” !! முறையான உணவுப் பழக்கம் கண்டிப்பாகத் தேவை – டாக்டரிடம் மட்டுமே காட்டுங்கள் – சீனியைக் கட்டுப்படுத்தும் 15 உணவுகள்

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை ...Read More

மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்

கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்மனிதனின் இரண்டு கால்களும் ஒரே உயரத்தில் ஒன்று போலவே தோற்றமளிப்பதுதான் இயல்பானது. ஆனால், சிலருக்கு இரண்டு கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. வளரும் பருவத்தில் ...Read More

ஐவிஎஃப் முறை சிறந்த பயனளிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

குழந்தை பெற்றுகொள்ள முடியாத தம்பதிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருப்பது தான் ஐவிஎஃப் முறை. ஐவிஎஃப் முறை சிறந்த பயனளிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்குழந்தை பெற்றுகொள்ள முடியாத தம்பதிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருப்பது தான் ஐவிஎஃப் முறை. செயற்கைமுறையில் சோதனைக்குழாயில் கருத்தரிப்பு செய்து அதை கருப்பைக்கு மாற்றி கருப்பையில் குழந்தையை வளரச்செய்வதே இம்முறை.. இம்முறை அதிக வெற்றியை கொடுத்தாலும் சிலருக்கு ...Read More