அந்தரங்க உறுப்பில் பிரச்சனையா? அவசியம் கவனியுங்க!

வெஜைனிடிஸ் (vaginitis) என்றால் என்ன?
வெஜைனிடிஸ் எனப்படும் பிறப்புறுப்பில் ஏற்படும் அலர்ஜி குறிப்பிட்ட வயதினருக்கு என்றில்லாமல் எல்லா பெண்களுக்கும் ஏற்படும். பிறப்புறுப்பில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றால் ஏற்படும் தொற்று மற்றும் இவற்றால் ஏற்படும் அலர்ஜிதான் வெஜைனிடிஸ்.

மெனோபாஸ் நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டினாலும் இவ்வகை அலர்ஜி ஏற்படும். காரத்தன்மை அதிகம் கொண்ட சோப்பினை உபயோகித்தல், உள்ளாடைகளில் உபயோகிக்கும் டிடர்ஜென்டினால், சுத்தமின்மை, காற்று பூகாத உள்ளாடை அணிவதால், ஆகியவற்றால் ஏற்படும். ஹார்மோன் குறைபாட்டினால், கட்டுப்பாடற்ற சர்க்கரை வியாதியாலும் வரும்.

அறிகுறி என்ன?

பிறப்புறுப்பில் அரிப்பு, தடித்தல், சிவந்து காணப்படுதல், துர்நாற்றத்துடன் வெள்ளை படுதல், இரத்தக் கசிவு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாகும்., உடலுறவின் போது தாங்க முடியாத வலி ஆகியவை வெஜைனடிஸால் உண்டாகும் பாதிப்பாகும்.

இந்த அறிகுறி தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை நாட வேண்டும். மேலும் மருத்துவரை நாடுவதோடு வீட்டிலும் நீங்கள் முறையான பராமரிப்பை மேற்கொண்டால் பயப்படத் தேவையில்லை.

யோகார்ட் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்: யோகார்ட்டில் லாக்டோ பேஸிலஸ் (Lacto bacillus) என்ற நல்ல பேக்டீரியாக்கள் உள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை. அதோடு அது அமில-காரத் தன்மையை சமன் செய்கிறது. தினமும் உட்கொண்டால், இந்த பிரச்சனையால் உண்டாகும் அசௌகரியத்தைக் குறைக்கலாம். மேலும் யோகார்ட்டை பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் பூசினால், இரு நாட்களுக்குள் முன்னேற்றம் கிடைக்கும்.

ஆப்பிள்-சைடர் வினிகர்:

ஆப்பிள்-சைடர் வினிகர் அமில-காரத் தன்மையை சமன் செய்கிறது. பேக்டீரியா தொற்றினை பெருக விடாமல் கட்டுக்குள் கொண்டு வருகிறது. 1- 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை வடிக்கட்டாமல் அப்படியே வெந்நீரில கலந்து அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து பருகவும். மேலும் 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை வடிகட்டாமல், வெதுவெதுப்பான நீரில் கலந்து பிறப்புறுப்பில் நன்றாக கழுவவும். இதை தினம் இரு முறை செய்யலாம்.

ஐஸ் ஒத்தடம்:

அரிப்பை தாங்க முடியாமல் சொறிந்தால் மேலும் அது பிரச்சனையை தீவிரப்படுத்தும். அதற்கு ஐஸ் ஒத்தடம் நல்ல தீர்வு. ஐஸ் கட்டியை ஒரு சுத்தமான துணியினால் கட்டி ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு நிற்கும்.

பூண்டு :

பூண்டு சிறந்த கிருமி நாசினி. ஆன்டி செப்டிக். பேக்டீரியா,ஈஸ்ட் ஆகியவற்றால் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கிறது. 4-5 சொட்டு பூண்டு எண்ணெயை அரை ஸ்பூன் விட்டமின் ஈ மற்றும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து அந்த இடத்தில் பூசவும். தினமும் இருமுறை செய்யலாம்.

போரிக் ஆசிட் :

வஜைனிடிஸினால் ஏற்படும் அசௌகரியத்தை போரிக் ஆசிட் எளிதாக போக்கும். இது அருமையான ஆன்டி செப்டிக், மற்றும் கிருமிகளை எதிர்க்கிறது. அரிப்பு, எரிச்சலை தடுக்கிறது. 2011 ஆம் ஆண்டு Journal of Women’s Health வெளியிட்ட ஆய்வில் போரிக் ஆசிட் நாள்பட்ட வெஜைனடிஸிற்கு தீர்வு தருவதாக கூறியுள்ளது. போரிக் ஆசிட்டை இரவு படுக்கும் முன் போடலாம். மறு நாள் காலையில் நன்றாக வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

குறிப்பு: போரிக் ஆசிட்டை கர்ப்பிணிகள் தவிர்க்கவும். சீமை சாமந்தி : சீமை சாமந்தி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது வலி, அரிப்பு எரிச்சலை போக்கும் மூலிகையாகும். சீமை சாமந்தி டீ பேக்கினை(chamomile tea bag) சுடு நீரில் சில நிமிடங்கள் அமிழ்த்தவும். பின் சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதன் பின் வலி மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் டீ பேக்கினை வைத்து பிழியவும். அதன் சாறு எல்லா இடங்களுக்கும் போகும்படி செய்யவும். தினமும் இருமுறை செய்யலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைட்:

ஹைட்ரஜன் பெராக்ஸைட் சிறந்த கிருமி நாசினி. ஆன்டி -பயாடிக் ஆகும். பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பினை முழுவது நிறுத்துகிறது. 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை உபயோகிக்கவும். 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை சம அளவு நீரில் கலந்து கொள்ளவும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தினில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலவையைக் கொண்டு கழுவவும். 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவவும். தினம் இரு முறை செய்யலாம்.

தேயிலை எண்ணெய்:

தேயிலை எண்ணெய் தொற்றுக்களை அதிகரிக்க விடாமல் செய்கிறது. அன்டி செப்டிக்காகவும் செயல்படுகிறது. துர்நாற்றத்தைப் போக்குகிறது. 4-5 சொட்டு தேயிலை ஆயிலை, வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவேண்டும். பின் பாதிக்கப்பட்ட இடத்தினில் அதனைக் கொண்டு கழுவ வேண்டும். தினம் ஒரு முறை செய்யவும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள் :

எதிர்ப்பு சக்தி நம் உடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கும். ஆகவே சரிவிகித ஊட்டச்சத்து கொண்ட உணவினை உண்ணுங்கள். நோய் எதிர்ப்பை தூண்டும் உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.

ஆரஞ்சு, க்ரீன் டீ, மிளகு, கீரை, ஆப்பிள், மஷ்ரூம், ப்ருக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். விட்டமின் டி அதிகம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய நீர் அருந்தவும், போதிய ஓய்வும் முக்கியம். உடற்பயிற்சியும்,சீரான நல்ல மன நிலையும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தரங்க பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்:

தினமும் சுத்தமான உள்ளாடைகளையே அணியுங்கள். உள்ளாடைகளை எப்போது வெயில் படும் இடங்களிலேயே காயவிடுங்கள். காற்று பூகாத உள்ளாடைகள் கிருமிகள் வர ஏதுவானது. ஆதலால், எப்போதும் சற்று தளர்த்தியே போடுங்கள். பிறப்பிறுப்பு எப்போதும் ஈரமாக இருந்தாலும் கிருமிகள் எளிதில் தாக்கும். சிறு நீரி கழித்தபின் நன்றாக கழுவி துடைத்திட வேண்டும். உலர்வாய் இருப்பது அவசியம்.

மேற்சொன்னவைகள் போல் ஆரோக்கியமான உணவுகள், சுகாதார உணர்வு மற்றும் சில வைத்திய முறைகளை கையாண்டால் போதும். இம்மாதிரியான பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *