முப்பது வயதில் முகச் சுருக்கங்களுக்கு பை பை சொல்லுங்கள்!!

முப்பது வயதானாலே பெண்களுக்கு பத்தோடு பதினொன்றாக ,வேறொரு கவலையும் சேர்ந்து கொள்ளும். அதாங்க வயதான தோற்றம். அடிக்கடி கண்ணாடி பார்த்து கவலைப்படுவதை விட ஆக வேண்டியது பாருங்க பெண்களே.

வீட்டில் கிடைக்கும் சின்ன சின்ன பொருட்களை கொண்டு நீங்க உங்க இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம்.அது உங்கள் கையில்தான் இருக்கிறது.சோம்பேறித்தனமாய் இல்லாமல் கொஞ்சம் மெனக் கெடுங்கள்.பிறகு என்றும் பதினாறுதான்.

முட்டை பேக்:

முப்பது வயதில்தான் முகம் தொய்வு அடைய ஆரம்பிக்கும்.அதுவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இன்னும் கவனமாய் பராமரிக்க வேண்டும்.இல்லையெனில் சீக்கிரம் வயதான முகம் வந்துவிடும். நீங்கள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை முட்டை பேக் போடுவதனால் முகம் இறுக்கமடையும், தொய்வடையாது.

செய்முறை:

முட்டையின் வெள்ளைக் கருவில் அரை ஸ்பூன் கடலை மாவு,அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து,கண்களை தவிர்த்து மீதி இடங்களில் பேக் காக போட வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து,குளிர்ந்த் நீரினால் கழுவ வேண்டும்.

கேரட் பேக்:

கேரட்,உருளைக் கிழங்கினை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். அதனுடன்,ஒரு சிட்டிகை சோடா உப்பு,மஞ்சள் சேர்த்து பேக்காக முகத்தில் போட வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இந்த முறையால் சுருக்கங்கள் மறைந்து சருமம் மிருதுவாகும்.

ரோஸ் வாட்டர் பேக்:

2 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன்,ஒரு துளி கிளிசரின்,இரு துளி எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து ஒரு காட்டனைக் கொண்டு முகம் முழுவதும் தடவ வேண்டும். அன்று முழுவதும் அப்படியே விடவும். இது சிறந்த மாய்ஸ்ரைஸர்,மேலும் இறந்த செல்களை சருமத்திலிருந்து அகற்றுகிறது.

தேங்காய் பால் பேக் :

தேங்காய் பால் எடுத்து அதை முகம் முழுக்க பஞ்சினைக் கொண்டு போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து ,குளிர்ந்த நீரினைக் கொண்டு கழுவவும். முகத்தினை பளபளப்பாக்கி,நிறத்தினை கூட்டும்.சுருக்கங்கள் அண்டாது.

வாழைப் பழ பேக்:

5-6 பழுத்த வாழைப் பழங்களை சிறிது வெதுவெதுப்பான நீரினைக் கொண்டு நன்கு மசித்து,முகம்,கழுத்து ஆகியஇடங்களில் போட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் கழுவவும்.

இங்கு கூறிய அனைத்து பேக்குகளும் சருமத்திற்கு ஃப்ரெண்ட்லியானது. பார்லர் சென்று பணத்தை இறைப்பதை விட,வீட்டில் இருந்தபடியே, நீங்களே உங்கள் முகத்தில் மேஜிக் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *