மூல நோய்க்கு தீர்வு

மூலம் என்பது ஆசன குழாயில் சதை கொத்து கட்டிகள் வீங்கும் பொழுது எழும் பிரச்சனை. ஹெமராய்ட்ஸ் எனப்படும் இந்த சதை கட்டிகள் ரத்த ஓட்டம், தசை, தசை நார் கொண்டவை.
இவை வீங்கும் பொழுதே மூல நோய் ஏற்படுகின்றது. இந்த மூலம், ஆசனக் குழாயினுள்ளும் ஏற்படலாம். ஆசன வாயின் வெளியிலும் உள்ளிலிருந்து வெளிவரலாம்.
* மூலம் என்பது இந்த சதை கொத்தின் வீக்கம் ஆசனக் குழாயில் ஏற்படுவதாகும்.

* இதன் அளவு வேறுபடும். ஆசனக் குழாய் உள்ளேயும் இருக்கலாம். ஆசன வாயின் வெளியிலும் வரலாம்.
* அநேகருக்கு 50 வயதிற்குள்ளாகவே ஏற்படுகின்றது. 10 சதவீதம் நோயாளிகளுக்கே அறுவை சிகிச்சை அவசியமாகின்றது.
* சில மூலம், தானே சில நாட்களில் சரியாகின்றது.
* மூலம் நெடுங்காலமாக ஏற்படும் மலச்சிக்கல், நெடுங்காலமாக ஏற்படும் பேதி, அதிக எடையினை தூக்குவது, கர்ப்பம், அதிகம் முக்கி கழிவுப்பொருள் வெளியேற்றுதல் போன்றவற்றாலேயே ஏற்படுகின்றது.
மூல நோயின் அறிகுறிகள் :
* ஆசன வாயில் அருகே ஏதோ தடித்த கட்டி போல் இருக்கும். வெளி மூலம் வலியுடன் கூடியதாக இருக்கும்.
* காலைக்கடன் முடித்த பிறகும் முடியாதது போலவே தோன்றும்.
* வெளிப் போக்கிற்குப் பிறகு ரத்தம் வெளிப்போகும்.
* ஆசன வாயிலில் அரிப்பு இருக்கும்.
* வெளிப் போக்கில் சளி இருக்கும்.
* வெளிப் போக்கில் வலி இருக்கும்.
* ஆசன வாயில் சிவந்து தடிக்கும்.
உள் மூலம் 4 பிரிவு படும். :
1. ஆசன குழாயில் சிறு சிறு வீக்கங்கள் இருக்கும். வெளித் தெரியாது.
2. முதலாவதை விட இவை பெரியவை. வெளிப் போக்கு இருக்கும் பொழுது இந்த தசை கட்டியும் வெளியாகும். பிறகு தானே உள்ளே சென்று விடும்.
3. மூன்றாவது பிரிவு ஆசன வாயில் வெளியிலே தொங்கும்.
4. மூன்றாவதை விட பெரியது. விரலாலும் உள்ளே தள்ள முடியாது. இதை அடுத்து மற்றொரு பிரிவு உண்டு. அது ஆசன வாயிலைச் சுற்றி சிறு சிறு கட்டிகள் போல் இருக்கும்.
இதனை அறிவது எப்படி?:
* உங்கள் உறவினருக்கு அதாவது ரத்த சம்பந்த உறவுகளில் யாருக்கேனும் மூலம் இருக்கின்றதா?
* வெளிப்போக்கில் ரத்தம் உள்ளதா?
* வெளிப்போக்கில் சளி உள்ளதா?
* காரணமின்றி திடீரென எடை குறைவு ஏற்பட்டுள்ளதா? மருத்துவரை அணுகுங்கள்.
* நார்ச்சத்து உணவு, காய்கறி, பழம் இவை நல்ல தீர்வு கொடுக்கும்.
* வலி மாத்திரைகள் மருத்துவர் கொடுப்பார்.
* மிக அதிக மூலத்திற்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *