பெண்கள் மருத்துவம்

வெள்ளைப்படுதல் குணமாக

சின்ன வயசுலயே சில பிள்ளைகளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாகி பாடாபடுத்தும். படிகாரம்னு ஒண்ணு இருக்குதுல்ல… அதை வாங்கி, மண்சட்டியில போட்டு நல்லா பொரிக்கணும். மாசிக்காயை தூளாக்கி, படிகாரம் எவ்வளவு இருக்கோ… அதே அளவுக்கு எடுத்துக்கிட்டு ரெண்டையும் கலந்துக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து, வெண்ணெய் விட்டு கொழச்சி, காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவைனு சாப்பிடணும். 10 நாள்லயே குணம் கிடைக்கும். ஆனாலும், ஒரு மண்டலம் வரைக்கும் சாப்பிட்டு முடிக்கறது நல்லது.

ரத்தசோகை சரியாக:
வயசுப் புள்ளைங்க ஒழுங்கா சாப்பிடாம, ‘விதி’யேனு கெடக்குறதுதான் இப்பல்லாம் ஃபேஷனுனு பேசிக்கறாங்க. ஆனா, இதுவே காலப்போக்குல ரத்தசோகை வர்றதுக்கு காரணமாயிடும். அப்படிப்பட்டவங்களுக்கு கீழாநெல்லிச் சமூலத்தை (வேர் முதல் பூ வரையிலான முழுச்செடி) அரைச்சி, ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து பால்ல கலந்து குடிச்சிட்டு வந்தா 10 நாள்ல ரத்தசோகை குணமாகும். தேவைனா தொடர்ந்து சாப்பிடலாம்.

மார்பு பகுதியில் வரும் புண் ஆற:
மார்புல சில பொண்ணுகளுக்கு புண் வந்து பாடாபடுத்தும். அதுக்கு கைவசம் மருந்து இருக்கு. காசுக்கட்டி 5 கிராம் அளவு எடுத்து, சுத்தமான தண்ணியில கரைச்சி, புண் வந்த இடத்துல தடவிட்டு வந்தா ரெண்டு, மூணு நாள்ல ஆறிரும். நல்லா குணமாகுற வரைக்கும் மருந்து போடலாம், தப்பில்ல.

முக வறட்சி விலக:
குங்குமப்பூ- அரை கிராம், சந்தன பவுடர்- 10 கிராம், மஞ்சள்தூள்- 5 கிராம், நெல்லிக்காய்கந்தகம் -1 கிராம்… இதெல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து பவுடராக்கிடணும். அதுல கொஞ்சம் பன்னீர் விட்டு அரைச்சி, 15 கிராம் வெண்ணெயில அதை குழைச்சி, கண்ணாடி கோப்பையில பத்திரப்படுத்தி வச்சிக்கிடணும். அதுல ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து ராத்திரி, ராத்திரி முகத்துல தேய்ச்சிட்டு வந்தீங்கனா… அழுக்கு, வறட்சியெல்லாம் பஞ்சா பறந்து போய், முகம் பளபளக்கும். தேவைப்படுறப்பயெல்லாம் இதைச் செய்யலாம்.

முகப்பரு விலக:
கடலை மாவை விளக்கெண்ணெயில கலந்து முகப்பருவுல பூசி ஒரு மணி நேரம், இல்லைனா ரெண்டு மணி நேரம் கழிச்சி குளிச்சிட்டு வந்தீங்கனா… பரு மாயமா மறஞ்சிரும்.

Related posts

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவரா? கர்ப்பம் தரிக்க முயல்கிறீர்களா?

admin

கருப்பையில் நீர்கட்டிகளை மிக எளிமையான முறையில், எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி சரி செய்ய இத படிங்க!….

sangika sangika

பிரா அணியும் இளம் பெண்களே எச்சரிக்கை.! அவசியம் படிக்கவும்..!!

admin

Leave a Comment