இயற்கை மருத்துவம்

இளநீர் குடித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்று நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தாது உப்புகளும், உயிர் சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும், இதயத்தின் செயல்களையும் சீராக்க உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ், கால்சியம், ரிபோப்ளோவின், மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருத்துவப் பொருளாகவும் திகழ்கிறது. இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், பேட்டிக் அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட், ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்ப்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகு பொருள் அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைத்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுதும் உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம்.

இது இயற்கை குளுக்கோஸ் ஆக செயல்படுகிறது. இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப்பகாலத்திற்கு உரித்தான மலச் சிக்கல், வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப்ப காலத்தில் குடிப்பதை தவிர்க்கவும்.

Related posts

மஞ்சளின் மகிமை

admin

உடல் நிறையை எப்போதும் சமனாகவே பேண!

sangika sangika

செவ்வாழையில் உயர்தர மருத்துவம் உள்ளது

admin

Leave a Comment