சித்த மருத்துவம்

தலை வலிக்கான சித்த மருந்துகள்

தலை வலிக்கான சித்த மருந்துகள்

1 . கருங்கோழிச் சூரணம்
புறணி நீக்கிய 20 பலம் வேப்பம்பட்டையை இடித்துத் தூளாக்கி 16 படி அளவுள்ள காடியில் 20 நாள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்று வயதாகிய கருங்கோழிச் சேவலைக் கொண்டுவந்து குடல், மயிர், கால்,
தலை ஆகியவற்றை நீக்கி அதன் வயிற்றினுள் மேலே ஊறவைத்துள்ள சரக்கையும் 2 பலம்
அசுவகெந்திப் பொடியையும் அடைத்து எல்லா பக்கங்களையும் நன்றாகத் தைத்து ஒரு
தாழியில் அடங்கஞ் செய்து மேல்சட்டி கொண்டு மூடி சீலைமண் செய்து கொண்டு
பின்னர் ஒர் அகன்ற தாழியில் மேற்சொல்லப்பட்ட காடியை ஊற்றி கோழியுள்ள
சட்டியை அதில் கட்டித்தூக்கி, ஒரு சாதி விறகினாலே, அந்தக் காடி ½ படியாகச்
சுண்டும் வரை எரித்தெடுத்து ஆற வைக்க வேண்டும்.

ஆறினபின் கோழியின் எலும்பை மட்டும் நீக்கி விட்டு சதையையும்
உள்ளிருக்கும் மருந்தையும் நிழலில் நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம்
செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

10 பலம் பறங்கிப்பட்டைச் சூரணம் மற்றும்
கடுகு
சுக்கு
கருஞ்சீரகம்
திப்பிலி
ஓமம்
கார்போக அரிசி
மிளகு
ஆகியவை வகைக்கு ½ பலமெடுத்து நன்கு சூரணித்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட மூன்று வகைச் சூரணத்தையும் கலந்து கருகாமல் சிறிதளவு வறுத்தெடுத்து ஒரு கலசத்தில் அடைத்துவைத்துக் கொள்ள வேணடும்.

தினமொன்று அரைபலம், தேன். 30 நாட்கள் தினம் ஒரு வேளை உட்கொள்ளத்
தீராதசூலை, குட்டம், முதலிய நோய்கள் நீங்கும். 37 நாட்கள் காலையிலும்
மாலையிலும் தினம் இருவேளை உட்கொள்ள வேண்டும்.

தீரும் நோய்கள்
கிரந்தி
வாயு
ஏரண்டம்
வாதம்
கிரிச்சன வாயு
முதலியன நீங்கும்.
15 நாட்கள் உட்கொள்ள
மண்டையிடி
சூலை ஆகியவைகள் நீங்கும்.

10 நாட்கள் உட்கொள்ள மற்ற எல்லா வியாதிகளும் நீங்கும்.

பத்தியம்:
புளி, உப்பு, பெண்போகம் நீக்க வேண்டும்.
கோழி, முருங்கை, அவரை, துவரம்பருப்பு ஆகும்.

வெந்நீரில் குளிக்க வேண்டும்.

2 . ஆக்கிராண மெழுகு
வெள்ளைப் பூண்டு
தும்பைப் பூ
குங்குமப்பூ
சவுரிப்பழம்
ஆதொண்டைப் பழம்
கஸ்தூரி மஞ்சள்
வேப்பம் பட்டை
இலிங்கம்
நொச்சி இலை

இவற்றைச் சம எடையாக கல்வத்தில் போட்டு வேப்ப எண்ணெய் விட்டு நன்றாக அரைத்து மெழுகு பதத்தில் வாயகன்ற குப்பியில் இடவும்.

வேண்டிய சமயத்தில் கடலைப் பிரமாணம் மெழுகைச் சீலையில் தடவித் திரிபோல்
சுருட்டித் தீப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை முகரவும்.

தீரும் நோய்கள்:
தலைப்பாரம்
தலையிடி
தலை நோய் முதலியன குணமாகும்.

பத்தியம்: பால் அன்னம் மட்டுமே ஆகும்.

3 . சகல நோய்க்கு மெய்
தாமரை
சிறுபூளை
வில்வம்
கோரைக்கிழங்கு
சாரணைவேர்
செங்கழுநீர்க் கிழங்கு
சீந்தில்தண்டு
கோவை
அதிமதுரம்
ஆல்
அரசு
அத்தி
இத்தி
வாகை மரங்களின் பட்டை
பனங்கிழங்கு
கற்றாழைவேர்
நாவல்
வீழி
வேம்பு வகைக்கு 1 பலம்
எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
இளநீர்
பதநீர்
கரும்புச்சாறு
நெய் ஆகியவற்றுடன்
தாளி
பொன்னாங்காணி
கோவை
நெல்லி
நீர்ப்பிரம்மி
கொடிவேலி
எலுமிச்சம்பழச்சாறு
ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
மிளகு
உளுந்து
கோட்டம்
முந்திரி
அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள்
நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர
வேண்டும்.

தீரும் நோய்கள்.
பித்தம்
வாயில் நீருரல்
தாதுநட்டம்
மேகம்
மூலக்கடுப்பு
வாந்தி
விக்கல்
ஈளை
சயம்
உடல்,கை,கால் எரிச்சல்
தலைநோய்கள்
விழிநோய்கள்
சொறி,சிரங்கு
சிலந்தி
தேமல்
நீர்க்கடுப்பு
ரத்தம் விழுதல்
ஆகியன தீரும்.
நரம்பு ஊரும்
எலும்புகள் வளரும்
உடல் வன்மை அடையும்.

4 . வேம்பு
வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும்.
எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக்
கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து
ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள்
தீரும்.

வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம்,
கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில்
அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி
நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்

Related posts

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் மாசிக்காய்.

admin

கர்ப்ப கால வயிற்று வலிக்கு…

admin

சுகப்பிரசவத்திற்கு உதவும் அதிமதுரம்

admin

Leave a Comment