மன அழுத்தத்தால் எடை கூடும்!

ஏரோபிக் மற்றும் வலிமைப் பயிற்சிகளை வாரம் ஒருநாள் மேற்கொள்ளும் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் 28 சதவிகிதம் குறைகிறது. வாரம் இரண்டரை மணி நேரம் கார்டியோ பயிற்சி மற்றும் ஒரு மணி நேரம் வலிமைப் பயிற்சிகளை மேற்கொண்டால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைப் பெருமளவில் குறைக்க முடியும் என்று PLOS medicines ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) அதிகமாக இருக்கும் போது, அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்கிற பெண்களுக்கு, கலோரிகள் எரிக்கப் படுவதில் தாமதம் ஏற்பட்டு, எடையும் அதிகரிக்கிறதாம். ஸ்ட்ரெஸ் இல்லாமல் அதே கொழுப்பு உணவுகளை உண்கிற பெண்களைவிட, ஸ்ட்ரெஸ் உடன் உண்பவர்களின் உடல் 104 கலோரிகளை குறைவாகவே செலவழிக்கிறதாம்!

அல்சீமர் எனப்படும் மறதி நோய் வரும் அபாயத்தை 53 சதவிகிதம் குறைக்கலாம். எப்படி? மூளைக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளான நட்ஸ் எனப்படுகிற கொட்டை வகைகள், பெர்ரிஸ், ஆலிவ் ஆயில் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

இந்தியாவில் 60 சதவிகிதம் பெண்கள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். சைவ உணவுக்காரர்கள் கீரை வகைகள், பீன்ஸ், அத்திப்பழம் சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் நன்கு உறிஞ்சிக் கொள்ள சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். காபி, டீ போன்ற கஃபைன் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கஃபைன் நிறைந்த உணவுகள் உடலின் இரும்புச்சத்து உறிஞ்சப்படும் செயல்பாட்டில் ஊறுவிளைவிக்கும் என்கிறது புதுதில்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம்.

நகங்களும் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தபட்சம் 30 மைக்ரோ கிராம் அளவுக்கு பயோட்டின் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதிகபட்சம் 100 மைக்ரோ கிராம் அளவுக்கு பயோட்டின்கள் எடுத்துக் கொள்ளலாம். முட்டை, கல்லீரல், காலிஃப்ளவர், Salmon வகை மீன், கேரட், வாழைப்பழம் போன்ற உணவுகளின் மூலம் இந்தச் சத்துகளைப் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *