ஆரோக்கியம்

இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்யவேண்டாம்

நாட்டில் அநேகமான பிரதேசங்களில் அதிகளவான வெப்பமான காலநிலையால் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெப்பக் காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இந்த அறிவித்தலை காலநிலை மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக விளையாட்டுத்துறை மருத்துவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பகல் பொழுதுகளில் உடற்பயிற்சி அல்லது விளையாடுவது கட்டாயம் என கருதினால் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமானதொன்று என விளையாட்டுத் துறையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் லால் ஏக்கநாயக்க
குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த கடும் வெப்பத்தை தாங்குவதற்கு சிறுவர்கள் மிகவும் அவதியுறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் மக்கள் அதிகமாக நீர் பருகவேண்டும் எனவும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை கட்டாயம் நீர் பருக வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மழைவீழ்ச்சி இன்மையே அதிக வெப்பத்திற்கு காரணம் எனவும் இன்னும் ஒரு மாதத்தில் எதிர்பார்த்தளவு மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் காலநிலை திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.ஜே.பிரேமலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா பிரதேசத்தில் அதிகமாக 36.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதாகவும்,அனுராதபுரத்தில் 35 பாகையும், கொழும்பில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் காலநிலை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கர்ப்ப காலத்தில் களைப்பு ஏற்படுவதன் காரணம் இதுதானாம்…!

admin

ஸ்லிம்மான இடைக்கு……

admin

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா?

admin

Leave a Comment