குழந்தை சிவப்பாக பிறக்க.

தான் கருப்பாக இருந்தாலும் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டும் என்பது அநேக பெண்களின் கனவு.

புதிதாக திருமணம் ஆகி கர்ப்பம் தரிக்கும் பெண்கள் குழந்தை அழகாக பிறக்க வேண்டும். புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதைவிட, பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துவார்கள்.

காரணம் தங்களுடைய செல்ல குழந்தை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

இவ்வாறான எண்ணம் கொண்ட பெண்களுக்கு கீழ் உள்ள குறிப்புகள் கண்டிப்பாக பயன்படும்.
குழந்தை சிவப்பாக பிறக்க சாதாரணமாக கிடைக்கும் வெற்றிலைப் பாக்குடன் குங்கும்ப்பூவை சேர்த்து சாப்பிட்டு வர குழந்தை சிவப்பாக பிறக்கும்.

புடலங்காயை பொடிப்பொடியாக நறுக்கி அதை நன்றாக வேகவைத்து சூப் செய்து அரை டம்ளர் அளவு குடித்து வர சிவப்பான குழந்தை பிறக்கும்.

பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த சாற்றை எடுத்து அதில் து மிளகு, கொத்தமல்லி இலைகளுடன் தேவையான உப்பையும் சேர்த்து அருந்தி வர குழந்தை சிவப்பு நிறத்துடன் பிறக்கும்.
குழந்தை சிவப்பாக மட்டும் இருந்தால் மட்டும் போதுமா? ஆரோக்கியம் வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயன்படும்.

கர்ப்பிணி பெண்கள் பேரிக்காய் சாப்பிட்டுவர ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
மேற்கண்ட அனைத்துமே உடல் நலத்திற்கு உகந்ததாக இருப்பதால் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, ‘கொழுகொழு’வென பிறக்கும்.

முதல் குறிப்பில் குறிப்பிட்ட குங்கும்பூவை ஐந்தாம் மாதத்தில் ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் வரை பாலுடன் கலந்து குடிப்பார்கள்.

குங்குமப் பூவானது பசியைத் தூண்டும்.இரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *