கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் .

கைக்குழந்தையோ அல்லது இன்னும் பேசத் தெரியாத குழந்தையோ விடாமல் தொடர்ந்து அழுதால், என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் .

முதலில் குழந்தைக்கு பசி அல்லது தூக்கம் , இதனால் அழுதால், அவற்றை கவனிக்கவும் .
இது இரண்டும் இல்லையென்றால் , ஏற்கனவே குழந்தைக்கு ஜுரம் போன்று ஏதாவது இருந்தாலும் இப்படி நை நை என்று அழலாம் .

மேலே சொன்ன காரணங்கள் இல்லாவிடில் , நீங்கள் முதலில் செய்ய வேண்டியது , குழந்தையின் உள்ளாடையை அல்லது nappyயை அவிழ்த்துப் பாருங்கள் . ஏதேனும் எறும்பு அல்லது சிறு பூச்சிகள் கடிப்பதனாலும் குழந்தைக்கு வலிக்கலாம் . அதே போல கைக்குழந்தையை படுக்க வைக்கும் இடத்திலும் எறும்பு அல்லது பூச்சிகள் இல்லையென்பதை உறுதி செய்து கொள்ளவும் .

அடுத்த காரணத்தைக் கண்டுபிடிக்க , குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, அதன் தலையிலிருந்து கால் வரை அனைத்துப் பகுதிகளையும் ஒவ்வொன்றாக மெதுவே அழுத்திப் பார்க்கவும் . நீங்கள் பேசுக் கொடுக்காமல் இதைச் செய்தால் ,குழந்தை அதைச் செய்ய விடாது .

இப்படிச் செய்யும்போது, எந்தப் பகுதியை அழுத்தும்போது குழந்தை முகத்தை சுணுக்குகிறதோ அல்லது கத்துகிறதோ, அந்தப் பகுதியில் குழந்தைக்கு வலி இருக்கிறது என்று சந்தேகப் படலாம் .
இதில் வயிற்று வலிக்கு மட்டும் நாமே ஓரளவு கைவைத்தியம் செய்துப் பார்க்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *