இடுப்பு பகுதி சதையை குறைக்கும் சூப்பரான பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே உடல் பருமனாகி அவதிப்படும் நபர்கள் ஏராளம்.

இதனால் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் அதிகமான அளவு கொழுப்பு சேர்ந்து கொள்கின்றது.

எனவே உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு செல்கிறோம், ஆனால் வீட்டிலேயே மிக எளிமையான உடற்பயிற்சியின் மூலம் சரிசெய்யலாம்.

Twister Crunches

இரண்டு கால்களையும் அகட்டிய நிலையில் நிற்க வேண்டும். கைகளுக்கு ஏதுவான அளவில், பிடிப்பாக ஒரு ஸ்டிக் ஒன்றை தலைக்கு பின்னால் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும்.

இப்போது, அப்படியே இடது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். பிறகு வலது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும்.

இதுபோல் மாறி மாறி உடலைத் திருப்ப வேண்டும். கைகள் அதே நிலையிலேயே இருக்க வேண்டும். தொடர்ந்து 15 முறை செய்ய வேண்டும்.

Abdominal Stretch

தரையைப் பார்த்தபடி படுத்து இரண்டு கைகளையும் முன்னால் ஊன்றிக்கொள்ளவும். உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்தவும்.

மொத்த அழுத்தமும் கைகளில் இருக்கட்டும். இதே நிலையில் ஐந்து நொடிகள் இருந்து, மீண்டும் உடலை பழைய நிலைக்குக் கொண்டுசெல்லவும்.

சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தலையையும் உடலையும் மேலே தூக்கி முன்னர் செய்தது போலவே செய்ய வேண்டும்.

இந்த இரண்டு பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *