பிரா அணியும் இளம் பெண்களே எச்சரிக்கை.! அவசியம் படிக்கவும்..!!

13 முதல் 19 வரை உள்ள எண்களை ஆங்கிலத்தில் அழைக்கும்போது கடைசி இரு எழுத்துக்கள் டீன் என்று முடியும். அதனல் அந்த வயதினரை டீன்-ஏஜ் வயதினர் என்று அழைக்கிறோம். இந்த வயதில் உள்ள பெண்கள், தங்கள் முன்னழகுக்கு – அதாவது மார்பக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விதவிதமான பிராவை தேர்வு செய்து தங்களை அழகு பார்ப்பதோடு, தங்கள் மார்பகத்தை எடுப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், இளம்பெண்களில் சிலருக்கு பிரா அணிவது எப்படி என்பதே தெரியவில்லை. தங்கள் மார்பக அளவுக்கு சரியான பிராவை அணியாமல், இறுக்கிப் பிடிக்கும் சிறிய பிராவையோ அல்லது தொள தொளவென்று இருக்கும் பெரிய சைஸ் பிராவையோ அணிந்து, தங்கள் அழகை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.

சரி… அப்படியென்றால், எப்படி பிராவை தேர்வு செய்து அணிவது?

சில டீன்-ஏஜ் பெண்கள், தங்கள் மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பதற்காக இறுக்கமான பிராவை தேர்வு செய்து அணிகிறார்கள். இது தவறு. இந்த டீன்-ஏஜில் மார்பகம் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், அதன் "ஷேப்" மாறிக்கொண்டே இருக்கும்.

சைஸ் குறைவான பிராவை அணிந்தால், அதன் கப் பகுதிக்குள் மார்பகம் அடங்காமல் வெளியில் பிதுங்கிக் கொண்டிருக்கும். தொடர்ந்து, அந்த "சைஸ்" குறைவான பிராவையே பயன்படுத்தி வந்தால் அவர்களது மார்பகம் பிதுங்கியது போன்ற நிலைக்கு மாறிவிடும். இதையெல்லாம், தடுக்க மார்பக வளர்ச்சிக்கு ஏற்ப பிராவின் அளவை அதிகரித்துக் கொண்டே வரவேண்டும்.

கனமான மார்பகம் கொண்டவர்களுக்கு, மார்பகம் சீக்கிரமே தொய்ந்து போக வாய்ப்புகள் அதிகம் உண்டு. அவர்கள் சரியான சைஸ் பிராவை தேர்வு செய்து அணியாவிட்டால் இந்த பிரச்சினை இன்னும் அதிகமாகிவிடும். அவர்களது கவர்ச்சியும் போய்விடும்.

இவர்கள் தேர்வு செய்யும் பிரா, கனமான மார்பகங்களை சற்று தூக்கித் தரும்படியும், மார்பகத்திற்குள் சரியாக பொருந்தும்படியும் இருக்க வேண்டும். அத்துடன், கொஞ்சம் இறுக்கமாகவும் இருக்க வேண்டும். மேலும், இவர்கள் இரவில் பிராவை கழற்றுவதை தவிர்த்துவிட வேண்டும். மீறி கழற்றி ப்ரியாக இருந்து வந்தால் மார்பகம் விரைவிலேயே தொய்ந்துபோய் விடும்.

மற்ற பெண்கள் இரவில் தாராளமாக பிரா அணிந்து கொள்ளலாம். அதேநேரம், அணியும் பிராவானது இறுக்கமாக இல்லாமல் இருப்பது நல்லது. இவர்களுக்கு, இரவில் பிரா அணிய விருப்பம் இல்லை என்றால் அதை தாராளமாக கழற்றி வைத்துவிட்டு படுக்கலாம். அதனால் எந்த ப்ராப்ளமும் இல்லை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். "எப் டி.வி."யில் "கேட் வாக்" வரும் பல மாடல்களைப்போல் பிராவே அணிவதில்லை.இப்படி பிரா அணிவதை தவிர்ப்பது ஆபத்தில் கொண்டுபோய்விடும். அவர்கள் தங்கள் மார்பக அளவுக்கு ஏற்ப சரியான பிராவை தேர்வு செய்து அணிவது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *