பருவம் அடையும் பெண்களுக்கு என்னென்ன சொல்லி தரவேண்டும்?

பெண்பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும்., அந்த சந்தேகங்களை தாய் தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும்.

எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்.

மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.

பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வளவுரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும், மனநிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்பு போன்றவை இருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செர்லித் தரவேண்டும்.

அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும்.

அதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும்,

அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது,

விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது.

எப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.

மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *