கருப்பையில் குழந்தை இறந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கருப்பையில் வளரும் குழந்தை இறப்பது. இந்நிலை மிகவும் அரிது என்றாலும், இன்றைய கால பெண்களுக்கு இம்மாதிரி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இது மிகவும் கொடுமையானது.

கருச்சிதைவு என்பது 24 வாரத்திற்கு முன் கரு கலைவது. ஆனால் 24 வாரங்களுக்கு பின் இறக்கும் குழந்தை கருப்பையிலேயே தான் இருக்கும். இப்படி இருந்தால், அதனைக் கண்டறிவது மிகவும் கடினம். எனவே தான் மாதந்தோறும் மருத்துவரை சந்தித்து குழந்தையின் வளர்ச்சியை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இங்கு 24 வாரத்திற்கு பின் குழந்தை இறப்பதற்கான காரணங்கள், குழந்தை இறந்திருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் இந்நிலையைத் தவிர்ப்பதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

காரணம் 1

குடும்பத்தில் யாருக்கேனும் 24 வார குழந்தை இறந்திருப்பதும், விபத்துக்கள், குழந்தையின் மோசமான வளர்ச்சி, நோய்த்தொற்றுக்கள் மற்றும் தொப்புள் கொடியில் முடிச்சு விழுந்து குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவது போன்றவை 24 வார குழந்தை இறப்பதற்கான காரணங்களுள் ஒன்று.

காரணம் 2

மற்றொன்று கர்ப்பிணிகளுக்கு புகைப்பிடிப்பது, மது அருந்துவது மற்றும் வேறு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தாலும், இந்நிலை ஏற்படும்.

காரணம் 3

40 வயதிற்கு மேல் கருத்தரிப்பது, IVF முறையைக் கையாள்வது போன்றவைகளும் 24 வார சிசு இறப்பதற்கான காரணங்களுள் ஒன்று.

அறிகுறி 1

வயிற்றில் வளரும் குழந்தை இறந்திருந்தால், அதற்கான அறிகுறி சரியாக தெரியாது. ஆனால் கர்ப்பிணிகள் எப்போதும் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் 24 வாரம் கழித்து அடிவயிற்றில் தாங்க முடியாத வலியுடன், இரத்தப்போக்கு ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

அறிகுறி 2

28 வாரத்தில் வயிற்றில் வளரும் குழந்தை உதைக்க ஆரம்பிக்கும். அந்த உணர்வை ஒவ்வொரு தாயும் அனுபவிப்பார்கள். ஆனால் உங்களுக்கு குழந்தையின் உதை எதுவும் தெரியாமல் இருந்தால், உடனே மருத்துவரைக் காணுங்கள்.

அறிகுறி 3

முக்கியமாக அடிவயிற்றுப் பகுதி மிகவும் மென்மையாக தெரிய ஆரம்பித்தால், சற்றும் நேரத்தை வீணாக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏனெனில் இதுவும் கருப்பையில் உள்ள குழந்தை இறந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

டிப்ஸ் 1

கர்ப்பிணிகள் தினமும் தவறாமல் மருத்துவர் பரிந்துரைத்த அளவில் ஃபோலிக் அமிலத்தை எடுக்க வேண்டியது அவசியம்.

டிப்ஸ் 2

சாப்பிட முடியவில்லை என்று கர்ப்பிணிகள் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. மேலும் கண்ட உணவுகளை உண்ணக்கூடாது. தினமும் சரிவிகித உணவுகளுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

டிப்ஸ் 3

கர்ப்ப காலத்தில் எக்காரணம் கொண்டும் புகைப்பிடிக்கும் இடத்தில் இருக்காதீர்கள். ஏனெனில் அந்த புகையை கர்ப்பிணிகள் சுவாசித்தால், அது குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

டிப்ஸ் 4

கர்ப்ப காலத்தில் உடல் எடை மிகவும் முக்கியமானது. உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். இப்படி பராமரித்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *