கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கான கண் பயிற்சிகள்

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்த்து வேலை செய்வதால் பார்வை மங்குவது, கண் வலி, கண்களில் இருந்து நீர் வடிவது, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் கண்களுக்கு போதிய கண் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய கண் பயிற்சிகள் பார்க்கலாம். முதலில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். தரையிலும் அமரலாம். நாற்காலியிலும் அமர்ந்து செய்யலாம். தினமும் கீழே உள்ள இந்த பயிற்சிகளை 30 செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். அலுவலகத்தில் வேலையின் இடைவேளையில் கூட இந்த பயிற்சிகளை செய்து வரலாம்.

* முதலில் கருவிழிகளை மேலும் கீழுமாக நகர்த்த வேண்டும். இப்படி 1 நிமிடம் செய்ய வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்யவும். பின் கருவிழிகளை இடதுபுறம் வலதுபுறமாக நகர்த்த வேண்டும். இப்பயிற்சியை 1 நிமிடம் தொடர்ந்து செய்து, பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.

* அடுத்து கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். அதில் முதலில் வலதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு நிமிடம் செய்ய வேண்டும். பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யயும். பின் இடதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து 1 நிமிடம் கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

* அடுத்து கருவிழிகளை இடதுபக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பின்பு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும். பின் கருவிழிகளை வலது பக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பிறகு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும்.

* அருகில் உள்ள ஒரு பொருளையும், தொலைவில் உள்ள ஒரு பொருளையும் 1 நிமிடம் பார்க்க வேண்டும். இப்படி செய்த பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.

* கண்களை மூடிக் கொண்டு கைவிரல்களால் கண்களுக்கு அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

– இந்த பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கண்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் இந்த பயிற்சிகளை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *