ஆயுர்வேத மருத்துவம்

தலைவலியை தகர்க்க எளிய வழி

தலைவலி தானேனு சாதாரணமா இருந்திட வேண்டாம் என்கிறார் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் இலி யாஸ் பாஷா. மூளையில் கட்டி இருந்தாக் கூட தலைவலி பின்னியெடுக்குமாம். சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினா தலைவலிக்கு தடா போடலாம் என்கிறார் அவர். கண்டநேரத்துக்கு சாப்பாடு, குட்டித் தூக்கம், வேலையை திட்டமிடாமல் செய்யும்போது ஏற்படும் டென்ஷன், அதீத கற்பனை போன்ற காரணங்கள் தலைவலிக்கு அடிப்படையாக உள்ளன. லைப் ஸ்டைலும் ஒரு காரணம்.

நூற்றுக்கணக்கான தலைவலிகள் உள்ளன. ஒற்றைத் தலை வலி, இரட்டைத் தலைவலி, பசியில், துக்கத்தில், தூக்கமின்மையில் என எப்போது வேண்டுமானாலும் வருகிறது. பெண்களை அதிகளவில் தாக்குகிறது. வேலைப் பளு, குழந்தைகளால் டென்ஷன், எதிர்காலம் பற்றி பயம், வெளியிடங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல் போவது என டென்ஷன் எனும் புயல் உருவாகி தலைவலியாய்த் தாக்குகிறது. மைக்ரெய்ன் எனப்படும் ஒற்றைத் தலை வலி, கிளஸ்டர் ஹெட்ஏக், மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்னர் வரும் தலைவலி மற்றும் மாதவிடாய் நின்ற பின்னர் ஏற்படும் தலைவலி என பெண்களை தலைவலி தாக்கும். தலைவலி தானே என மருந்துக் கடையில் ஒரு மருந்தை வாங்கிப் போட்டுக் கொள்வது தவறு. மூளையில் உள்ள கட்டியின் காரணமாக கூட தலைவலி வரலாம். எனவே அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தலைவலிக்கான காரணத்தை மருத்துவ சோதனைகள் மூலம் கண்டறியலாம். சரியான காரணத்தை அறிவதன் மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தலைவலியுடன் வாந்தியும் இருந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம். வாழ்க்கையைப் பற்றி எளிமை யாக சிந்திப்பது, டென்ஷனைத் தவிர்ப்பது. உணவில் அதிக கொழுப்பில்லாமல், துரித உணவு வகைகளை தவிர்த்து டயட்டில் கவனம் செலுத்துவது அவசியம். அதிக புளிப்பு, காரம், அதிக சர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது. அடிக்கடி தலைவலி வரும் பிரச்னை உள்ளவர்கள் யோகா, தியானம், காலை நேர வாக்கிங் என உடல், மனப் பயிற்சியில் ஏதாவது ஒன்றை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு தூக்கம், வேலைக்கு இடையில் சிறிய ஓய்வு. பிடித்த மாதிரியான சூழலை உருவாக்கிக் கொள்ளலாம்.

டென்ஷனைக் குறைப்பது, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது, உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்துவதும் தான் தலை வலியை வழியனுப்பும் எளிய தத்துவம் என்கிறார் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் இலியாஸ் பாஷா.

ரிலாக்ஸ் தெரபி

தலைவலிக்கு அடிப்படை டென்ஷன். தேவையற்ற கோபத்தால் பல்ஸ் எகிற நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல் தடாலடியாக எதையாவது செய்து விட்டு பின்னர் சாரி கேட்பவர்களே அதிகம். அப்படி மனதுக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போது உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதற்காக ரிலாக்ஸ் தெரபி உள்ளது. அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் இல்லாத அறையில் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அங்கு நல்ல காற்றோட்டம் இருக்கட்டும். கட்டில் அல்லது தரையில் கொஞ்சம் ரிலாக்சாக படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவும். பின்னர் கண்களை இறுக்கமாக இல்லாமல் இலகுவாக மூடிக் கொள்ளவும். கோபம் வரும் போது சிலர் புருவங்களை சுருக்கிக் கொள்வர். முகம் இறுக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் தசை இறுகும். இதைத் தவிர்க்க புருவத்தையும், முகத்தசைகள் இறுகுவதையும் தவிர்த்து ரிலாக்சாக வைத்துக் கொள்ளலாம். மனதுக்குப் பிடித்த வேலை மூலம் ரிலாக்ஸ் செய்து கொள்வது ஈசி. மனம் சமாதானம் அடைந்த பின்னர் நிதானமாக யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தலைவலிக்கு விடை கொடுக்கலாம்.

பாட்டி வைத்தியம்

அருகம்புல், ஆலமர இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக குணமாகும்.
அவரை இலையை அவித்துத் தலையில் பூசிக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.
ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து குளித்து வந்தால் மண்டைக் குடைச்சல் குணமாகும்.

இஞ்சியைத் தோல் நீக்கி தேன் சேர்த்து வதக்கி தண்ணீர் (50) மிலி விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

இஞ்சியைக் காயவைத்து பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைபாரம் குறையும்.

இஞ்சிச்சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சிசாற்றில் வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.

இரட்டைப் பேய் மருட்டி இலையை தண்ணீரில் போட்டு ஓமம் சேர்த்துக் கொதிக்க வைத்து, நீராவி பிடித்தால் அதிக வியர்வை வெளியேறி தலைவலி குறையும்.
எருக்கம் பாலில் வெள்ளை எள்ளை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
எலுமிச்சம்பழச் சாறை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி நீங்கும்.

எலுமிச்சம்பழத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம்.

எலுமிச்சம்பழச் சாறுடன் மிளகை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
கடுகை தண்ணீரில் ஊற வைத்து முளைக்கட்டவும், பின்னர் அதனை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். – See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=828#sthash.Kpi6mAwN.dpuf

Related posts

உடல் ஆரோக்கியத்திற்கு பயன் தரும் அரியவகை மூலிகைகள்

admin

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம்பூ கஷாயம்

admin

மூக்கடைப்பை சரிசெய்யும் கற்பூரவல்லி

admin

Leave a Comment