இயற்கை மருத்துவம்

கர்ப்ப காலத்தின் போது சாப்பிட வேண்டிய‌ 5 ஆரோக்கியமான பழச்சாறுகள்

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? வாழ்த்துக்கள்! இப்போது நீங்கள் ஒரு தாயாக போகிறீர்கள், எனவே உங்கள் சுகாதார சிறப்பை பேணுவதற்கு நாள் முழுவதும் பல்வேறு குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை கேட்கிறீர்கள். இந்த பலவிதமான‌ ஆலோசனைகளால் நீங்கள் குழம்பி விடுவதோடு அதற்காகவும் பெரும்பாலும் கவலைப்படுகிறீர்கள். எனவே இதற்கான எளிய வழிமுறைகள்! கர்ப்ப காலத்தில் வழக்கமாக‌ சில யோகா அல்லது உடற்பயிற்சி செய்து 300 கூடுதல் கலோரிகளை சேர்ப்பது. பெரும்பாலான மக்கள் நீங்கள் ஆரோக்கியமாக‌ சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால் நீங்கள் எப்போதும் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் மிகவும் அத்தியாவசிய பொருட்களின் சேர்க்கை என்னவென்று யோசிப்பீர்கள்? இது பற்றி உங்களுக்கு தெரியாது என்றால், இந்த கட்டுரையை நீங்கள் படிக்கவும்.

கர்ப்பிணி பெண்களுக்கான‌ 5 வகையான பழச்சாறுகள்:
ஜூஸ்கள் உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை உங்கள் கர்ப்ப காலத்தில் வழங்குவது ஒரு சிறந்த பழக்கமாகும். நீங்கள் ஒரு நாளுக்கு, ஒரு வேளை ஒரு பழச் சாற்றை குடித்தால் அது உங்களை நாள் முழுவது ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதே நேரத்தில் அது உங்கள் முகத்தில் ஒரு பிரகாசம் மற்றும் அழகையும் சேர்க்க உதவுகிறது. நீங்கள் எந்த சாற்றை குடிக்க வேண்டும் என்று தெரியாதா? இதோ உங்களுக்கான பழச்சாற்றின் வகைகள்.

5-Healthy-Fruit-Juices-To-Be-Taken-During-Pregnancy-4
1. ஆப்பிள் ஜூஸ்:

வழக்கமாக ஆப்பிள் ஜூஸ் ஒரு கிளாஸ் எடுத்துக் கொண்டால் இந்த கர்ப்ப காலத்தில் நிச்சயமாக உங்களை ஆரோக்கியமாக‌ உணர உதவும். இதற்கான‌ ஒரு எளிய செய்முறையும் உள்ளது:

1. இரண்டு மூன்று ஆப்பிள்கள், தோல் நீக்கப்பட்டது

2. இவற்றை நீர் சேர்த்து நன்றாக‌ கொதிக்க வைக்கவும்

3. இதை நன்றாக அரைக்கவும்

4. ஒரு கண்ணாடியில் ஊற்றி இதனுடன் சில எலுமிச்சை சாறு கலந்து ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் குளிர்ச்சி போன பின் சாப்பிடவும்.

5-Healthy-Fruit-Juices-To-Be-Taken-During-Pregnancy-5
2. கொய்யா ஜூஸ்:

கொய்யா, கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகளை தடுக்கிறது. கொய்யா சாறு ஒரு கிளாஸ் தயாரிக்க‌, 2 கொய்யா, சர்க்கரை, எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி, மற்றும் சில இஞ்சி சாறு தேவைப்படுகிறது.

செய்முறை:
1. நீரில் கொய்யா கொதிக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவும்.

2. இப்போது சாறு தயார் ஒரு மிக்சியில் இதை சேர்த்து கூட இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக‌ அரைத்துக் கொள்ளவும். இதை அரைத்த‌ பிறகு, தேவைப்பட்டால் சில ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகவும்!

5-Healthy-Fruit-Juices-To-Be-Taken-During-Pregnancy-3
3. திராட்சை ஜூஸ்:

நீங்கள் சில‌ மணம் நிறைந்த திராட்சையை சேர்த்துக் கொண்டால் நிச்சயமாக உங்களின் சுவை மொட்டுகள் சொர்க்க‌லோகத்தில் இருக்கும்! திராட்சையின் பழச்சாறு ஒரு கிளாஸ் செய்வது எப்படி என்பதை கற்று கொள்வோம்.

1. திராட்சை 500 கிராம் எடுத்துக் கொண்டு அவற்றை மசித்துக் கொள்ள வேண்டும்.

2. ஒரு மிக்சியைக் கொண்டு அவறை மசித்து சாறு எடுக்க வேன்டும்.

3. இந்த சாறை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

4. இத்துடன் எலுமிச்சை சாறுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

5-Healthy-Fruit-Juices-To-Be-Taken-During-Pregnancy-2
4. பீட் ரூட் சாறு:

பீட் ரூட் சாறு ஒரு கிளாஸ் தயாரிக்க தேவையானவை, இது மிகவும் எளிதானது, 4 கேரட், 2 பீட் ரூட், 1 ஆப்பிள் போதுமானது!

1. அனைத்து பொருட்களையும் துண்டுகளாக செய்து அவற்றை ஒரு மிக்சியில் போட்டு சாறு எடுக்க வேண்டும்.

2. சில நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகளையும் சாற்றுடன் சேர்க்க வேண்டும்.

3. தயார் செய்த உடனே பருகவும். நீங்கள் ஒரு வாரத்திற்கு மூன்று முறை இந்த பழச்சாறை குடிக்கலாம்.

5-Healthy-Fruit-Juices-To-Be-Taken-During-Pregnancy
5. வாழை மற்றும் தேன் ஜூஸ்:
வாழைப் பழம், தயிர் மற்றும் தேன் கலந்து பயன்படுத்துவது முற்றிலும் ஆச்சரியமான ஒன்றாகும். அது மனநிறைவுள்ள சுவையை தருவதோடு, பிற்பகலில் சாப்பிடக்கூடிய இனிய பானமாக உள்ளது. இங்கே நீங்கள் சுகாதாரமான மற்றும் சுவையான சாறை செய்வதற்கு தேவையான பொருட்கள் – அரை கப் பால், தயிர் அரை கப், ஒரு பழுத்த வாழைப் பழம், மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி.
எல்லாம் சரியாக உள்ளது? இப்போது, செயல் முறை பகுதி!
1. இந்த மூன்று முக்கிய பொருட்களை ஒன்றிணைத்து ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். அது மென்மையாக ஆகும் வரை அரைக்க வேண்டும்.

2. இதில் சில ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அதை ஒரு குவளையில் ஊற்ற வேண்டும்.

3. இதை குளிர்வித்து குடிக்க வேண்டும்

என்ன உங்களுக்கு இதை குடிக்க மிகவும் ஆசையாக உள்ளதா? இந்த சாறுகள் சுவையாகவும், உங்களுக்கும் உங்கள் வளரும் குழந்தைக்கும் ஆச்சரியமான‌ சலுகைகளை வழங்குகின்றது. நீங்கள் இந்த மனநிறைவுள்ள பழச்சாறுகளை குடிக்கும் போது உங்கள் குழந்தை வலுவாக‌ மற்றும் ஆரோக்கியமாக‌ வளர இது உதவும்!

Related posts

இருதய நோயால் அவதியா? தக்காளி சாப்பிடுங்க

admin

தர்பூசணிப் பழம்

admin

இயற்கையன்னை எமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது இவைதான்…

sangika sangika

Leave a Comment