வியாதிகளை அடித்து விரட்டும் பூண்டு

சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது.

பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது.

நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.

இதுமட்டுமல்லாமல் பூண்டு சாப்பிட்ட நான்கு வாரங்களுக்கு பிறகு கொழுப்பின் அளவு 12 சதவீதமாக குறைந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ரத்தம் உறைந்து ரத்தகட்டிகள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.

பூண்டு குழம்பு

சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமலும், தேங்காய் வறுக்கும் போது மட்டும் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும்.

வறுத்தவற்றை ஆறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியதும், புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ளவற்றை போட்டு கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான பூண்டு குழம்பு ரெடி!

பூண்டு லேகியம்

பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.

வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.

பூண்டு துவையல்

கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த பின், அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *