நுரையீரல் பிரச்சனையா?

பீன்ஸ், கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறைந்துள்ளது.

தற்போது மாறிவரும் காலக்கட்டத்தில் நமது உடல் நலத்தின் மீது அக்கறை என்பது அவசியமானதாகும். புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல் காற்று மாசுப்படுதலாலும் அதிகம் பாதிக்கப்படுகிறது.

பெருகிய வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுப்பட்டிருப்பதால், சுமார் 60 சதவிகிதம் பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுசளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் மனிதனை தாக்குகிறது.

மருத்துவத்துறையில் பல்வேறு மருந்துகள் இருந்தாலும், ஆரோக்கியான உணவுகளை உண்பதன் மூலம் நம்மை காத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொண்டனர். இதன் முடிவில் பீன்ஸ், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை கணிசமாக குறைந்தது தெரிந்தது.

மேலும் நோய் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும் போது அவர்களின் வியாதி வளர்ச்சி விகிதம் குறைந்தது. நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

தினமும் சுமார் 50 கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90 சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பச்சை பீன்சில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் பச்சை பீன்சில் அதிகம் உள்ளது.

அதனால் பீன்சை முழுவதுமாக வேகவைப்பதை காட்டிலும் அரை வேக்காட்டுடன் சாப்பிடுவது சிறந்தது. பீன்சை வேகவைக்கும் போது அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சூப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் பீன்சின் முழுசத்துகளையும் பெறமுடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *