ஒரு கப் தேநீரில் ஓராயிரம் விஷயங்கள்!

ஒரு கால கட்டத்தில் கல்யாண வீடு என்று வந்தால் டீ பார்ட்டி உண்டா என்று கேட்டவர்கள் உண்டு. ரிசப்ஷன் எனும் மாலை நேர வரவேற்பு  வைபவத்தையே நம்மவர்கள் அங்ஙனம் குறிப்பிட்டார்கள். இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மேற்படி மாலை நேர சிற்றுண்டி விருந்தில்  தேநீர் எனும் டீயும் முக்கிய அங்கம் வகித்ததால் கூட அப்படி நம் முன்னோர்கள் பகர்ந்திருக்க கூடும். மேற்படி தேநீரை பற்றி கொஞ்சம் தெரிந்து  கொள்வோமே.

தூக்கத்தை விரட்டுகின்ற தன்மை கொண்ட தேநீரை தூக்கம் இன்றி அவதிப்படுகிறவர்கள் மாலை 4 மணிக்கு பிறகு விலக்கி வைக்க வேண்டும்.  உலகின் எந்த பகுதியில் வசித்தாலும் சரி, சுறுசுறுப்பாக இயங்க தேநீர் அருந்துவதை மக்கள் விரும்புகின்றனர். மேலும் இதயத்திற்கு வலு சேர்க்கவும்,  புற்றுநோய் வராமல் தடுக்கவும் தேநீர் தொண்டாற்றுகிறது. குளிர், கோடை காலத்திற்கு ஏற்ற தேநீர் ஒரு நாள் 4 தடவை பருகும் பழக்கம்  கொண்டவர்களை இதய நோய் வாட்டுவதில்லை என்பது நிபுணர்கள் கண்டறிந்தது.

இதில் உள்ளடங்கிய நச்சு முறிவு சக்தியான “பாலிபெனால்ஸ்“ வேறு எந்த கஷாய வகைகளிலும் கிடையவே கிடையாது. மேலும் இதிலுள்ள  “ஃப்ளோரைடு“ பற்களைகூட பளிச்சிட வைக்கின்றது. இன்றும் இ.ஜ.சி.ஜி. எனும் நச்சு முறிவு மருந்து உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை கூட  அழிக்க வல்லதாகும். தேநீரில் உள்ள “ஃப்ளாவோனாய்ட்ஸ்“ கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் மாரடைப்பும், பக்கவாதமும் தடுக்கப்படுகின்றது.

அவசர சிகிச்சையில் கூட தேநீர் தன் பணியை செய்கிறது. பால் சேர்க்காமல் அருந்தப்படும் தேநீரானது குறுகிய இரத்தக்குழாய்களை கூட 90 நிமிட  நேரம் விரிவடைந்து செயல்பட வைக்கிறது. குறிப்பாக க்ரீன் டீ, கறுப்பு தேநீர் (கடுந்தேயிலை) அருந்தும் பழக்கமுடையவர்கள் உடல் பருமன்  இன்றியும், தேநீரில் இஞ்சி, துளசி கலந்து பருகுபவர்கள் ஜலதோஷ தொந்தரவின்றியும் ஹாயாக உலா வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *