ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி!

சாறுகள் பிழிந்த பின் எலுமிச்சை பழத்தோலை துண்டு துண்டுகளாக நறுக்கி வெயிலில் வைத்து சருகு போல் உலர்த்த வேண்டும். பின்னர் அதில் 40  கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 40 கிராம் நாரத்தை மரத்துக்கிளை 24 கிராம், வில்வ இலை 24 கிராம், மகிழ இலை 24 கிராம்,  கருவேப்பிலை 24 கிராம் சேகரித்து இவற்றை தனித்தனியே மண் சட்டியில் போட்டு கருக வறுத்து எடுத்து உரலில் போட்டு இடித்து சலிக்க  வேண்டும். இச்சமயம் 8 கிராம் படிகாரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்த பின் மாவைச் சல்லடையில் சலித்து ஒரு ஜாடி அல்லது  பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.

எலுமிச்சைப் பற்பொடி

நமது உடலில் வைட்டமின் சி உயிர் சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். இச்சத்து குறைந்து விடுமானால் கண் மங்கல் ஏற்படும். எலும்பு  பலகீனப்படும். அதாவது கடினத்தன்மை இழந்து ஒடியும் தன்மை உண்டாகும். பல் சம்மந்தமான எல்லா வியாதிகளும் உண்டாகும். இந்த வியாதி  ஏற்பட்டால், அது நகங்களையே அதிகளவில் தாக்கும். நகம் வெளுத்து பலகீனப்பட்டு, சதையை விட்டுக் கழன்று விழுந்து விடும்.

இந்த விதமான கேடுகளை உண்டு பண்ணும் வியாதியை ஆங்கிலத்தில் ஸ்கர்வி எனக் குறிப்பிடுகின்றனர். இதனைக் குணப்படுத்த நெல்லிக்காய்  உதவுகிறது. நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றில் தேக்கரண்டியளவு தேனை விட்டு காலையில் மட்டும்  தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட வேண்டும். நெல்லிக்காயிலுள்ள வைட்டமின் சி உயிர்சத்து நமது உடலில் தேவையான அளவு சேர்ந்த உடன்  ஸ்கர்வி நோய் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *