சித்த மருத்துவம்

சிறுநீரக நோய், அல்சரை குணப்படுத்தும் துளசி

ராம துளசி சாதாரண பசுமை நிறத்தையும் பசுமையான காம்புகளையும் உடையது. கிருஷ்ண துளசியோ கரும்பச்சை நிறத்தையும் செம்மையும் சற்று நீலமும் கலந்த வண்ணமுடைய காம்புகளையும் கொண்டிருக்கும். துளசி வயிற்றில் தோன்றித் தேங்கித் துன்பம் தருகிற வாயுவை (காற்றை) வெளியேற்றக் கூடியது.

இதனால் வயிற்றினுள் வாயுவும் அதன் விளைவாகத் தோன்றும் அமிலச் சுரப்பும் கட்டுக்குள் கொண்டு வர முடிகிறது. துளசி வயிற்றிலுள்ள அத்துணைத் துன்பங்களையும் குறிப்பாக வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்புண் (அல்சர்) போன்றவற்றைத் தணிக்கக் கூடியது. விட்டு விட்டுத் தோன்றி வேதனை தரக் கூடிய வலி எதுவாயினும் உடனடியாகத் தணிக்கக் கூடிய வல்லமை துளசிக்குஉண்டு.

ஆஸ்துமா என்று சொல்லக் கூடிய மூச்சு முட்டல் மூச்சிறைப்பு போன்ற ஒவ்வாமையால் வரக் கூடிய கொடுமையான நோயைத் தணிப்பது மட்டுமின்றி அவற்றை ஒட்டாமல் தடுப்பதும் துளசியின் சிறப்பாகும். வாதசுரம் உள்ளிட்ட மூட்டுவலிகளுக்கு வல்லமை மிக்க மருத்துவப் பொருளாக துளசி விளங்குகிறது.

துளசிச் சாற்றைப் பருகுவதாலும் மேலே பூசுவதாலும் இப்பயன் கிட்டுகிறது. எவ்வகைக் காய்ச்சல் ஆனாலும் துளசிச் சாறு பருகுவதால் வியர்வையைப் பெருக்கி உடல் சூட்டைத் தணிப்பதால் காய்ச்சலைக் கண்டிக்கிறது. தொண்டை தொட்டு நெஞ்சறை தொடர்ந்து நுரையீரல் வரை உள்ள சளியை கரைத்து உடைத்து வெளித்தள்ள வல்லது.

உடல் ஆரோக்கியமாகச் செயல்பட அதன் உள்ளுறுப்புகள் செவ்வனே பணிபுரிவது அவசியம். துளசி அனைத்து உள் உறுப்புகளையும் குறிப்பாக சுரப்பிகளை நன்கு இயங்கும்படித் தூண்டி விடுகின்றது. நம் உடலின் மிக உன்னதமான உறுப்புகளின் ஒன்றான ஈரலை நச்சுகளினின்று பாதுகாத்து (ஹெபிபேட்டா புரொடக்டிவ்) நன்னிலையில் இயங்கிச் செய்கிறது.

துளசியின் விதைகள் பாலுறுப்புகள் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் நோய்களைப் போக்கும் மருத்துவ குணத்தைப் பெற்றது ஆகும்.  துளசியின் வேர்ப்பகுதி மலேரியாக் காய்ச்சலான நடு நடுங்கச் செய்யும் குளிர்காய்ச்சலைப் போக்கக் கூடியது. துளசியை அன்றாடம் உபயோகப்படுத்துவதால் அது பேய்போல ஆட்டுவிக்கும் வெறிநோயைப் போக்கும்.

துளசி, மனம், உடல், ஆவி ஆகியவற்றுக்கு ஆரோக்கியம் அளிக்க வல்லது. சோர்வை நீக்குவது நுண்கிருமிகளைப் போக்க வல்லது. பூஞ்சைக் காளான் நோயைப் போக்கவல்லது. வீக்கத்தைக் கரைக்கக் கூடியது.

ஆயுவேத மருத்துவத்தில் சளி இருமல் காய்ச்சல், இரை, அறைக் கோளாறுகள், வயிற்றுப் புண் ஆகிய நோய்களை குணப்படுத்த துளசி சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஞாபக சக்தியைத் தூண்டவும் துளசி பயன்படுகிறது.

Related posts

”வளர்த்தியில்லாம போய், அதனாலயே பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா, வெந்தய லேகியம் பண்ண…

admin

மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! மூலிகைகள் கீரைகள்!!

admin

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழைப்பழம்!

admin

Leave a Comment