பெண்கள் மருத்துவம்

சினைப்பை நீர்கட்டி (Ovrian Cyst)

குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.

சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.

சிறுமியாக இருந்து குமரி பருவத்தை எட்டும் காலத்தில் சுமார் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் உடளவில் மாற்றம் ஏற்படத்துவங்குகிறது. மார்பகம் வெளிப்படையாக பெரிதாக வளரத் துவங்குதல். அக்குள் பாகங்களில், பிறப்புறுப்பு பாகங்களில் முடி முளைக்கத் துவங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது.

இச்செயல்களுக்கு மூல காரணமாக இருப்பவை சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு.

சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5-வது நாளிலிருந்து 14-ஆம் நாள் வரை இச் சுரப்பு அதிகமிருக்கும். சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14-வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.

ப்ரோஜெஸ்ட்ரோன்

விடாய் வெளியான 14-வது நாள் முதல் விடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.

சினைப்பை நீர்கட்டி அறிகுறிகள்

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.

இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து ஹோமியோபதி,சித்தா,ஆயுர்வேதம் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.

அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. அக்குப்பங்சர், ஹோமியோபதி, சித்தா போன்ற மாற்று சிகிச்சைகள், உடற்பயிற்சி, உடல் எடையை குறைப்பது போன்ற முறைகளை கடை பிடித்தால் கருத்தரிப்பதிலும் குழந்தை பிறப்பதிலும் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

மாத விடாயை ஒழுங்குபடுத்தலாம். சினைப்பை நீர்க்கட்டி இருந்தால் உடல் பருமன் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்குபடுத்த கொடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளாலும் உடல் பருமன் அதிகரிக்கும்.

சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு கட்டிகள் தோன்றக்கக் கூடும்.

ஹோமியோ மருந்துகள் :

அபிஸ் மெல், காலிப்புரோமேடம், தூஜா போன்ற மருந்துகள்.

உணவு வகை – பழக்கம்
இறைச்சி வகை தவிர்த்தல் நலம்
சுரைக்காய், தண்டுக்கீரை, உணவில் சேர்த்தல் நலம்
மாதுளம்பழம் சினைப்பை, கர்ப்பப்பை குறைபாடுகளை சீராக்க உதவும்.

Related posts

மாதவிடாய் நின்ற பெண்கள் கட்டாயம் இத படிங்க!…

sangika sangika

குழந்தை பிறந்த பிறகு பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

admin

அவசியம் படிக்க..கர்ப்பிணி பெண்கள் அறிய வேண்டிய முக்கிய மாத்திரைகள்!

admin

Leave a Comment