சரியாக சாப்பிடாத பெண்களுக்கு வரும் மூட்டு வலி

சில பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துபோட்டு செய்து விட்டு சரியான நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். நேரம் தப்பினால் அவ்வேளைக்குரிய உணவையே தவிர்த்து விடுவார்கள். இது பொதுவாக பல பெண்களின் குணமாகும். நேரத்திற்கு சாப்பிடாமல் தவிர்ப்பதால் அஜீரணக் கோளாறுகள் உண்டாகிறது.

இது போல் அதிக காரம், புளித்த தயிர், போன்றவற்றை சேர்த்துக் கொள்வதால், குடலில் அபானவாயு சீற்றம் கொள்கிறது. இந்த அபானவாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டது. ஆனால் இது சீற்றம் கொள்ளும் பொது மேல்நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது. அங்கிருந்து பின்கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் செல்கிறது. அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது.

இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர் கோர்க்கச் செய்கிறது. இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்த நீர் இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது. இதனால் மூட்டு வலி ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் ஆரோக்கியமாக மூட்டு வலியின்றி வாழவும், பெண்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

குறிப்பாக வயதான பெண்கள் மூட்டு வலியால் அதிகம் அவதிப்படுவர். தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *