மருத்துவ கட்டுரைகள்

இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி?

* படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. தோள்பட்டை கீழே சிறிய தலையணை வைத்து உயர்த்திக் கொள்வதும், தலைக்கு சற்று உயர்த்தி தலையணை வைத்துக் கொள்வதும், இடது பக்கமாக திரும்பிப் படுப்பதும் இரவில் ஆசிட் மேலே ஏறாது இருக்க உதவும்.

* முழு வயிறு உணவோடு இரவு படுக்கைக்குச் செல்வது `ஆசிட்’ சுரப்பதை அதிகரிக்கச் செய்யும். தூங்க செல்வதற்கு 2-3 மணிநேரம் முன்பாக உணவு உட்கொள்வதும், இரவில் `ஸ்நாக்ஸ்’ எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் `ஆசிட்’ சுரப்பதை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கும்.

* சாக்லேட், கேக், காபி போன்றவை மாலைக்குப் பிறகு எடுத்துக்கொள்வது `ஆசிட்’ சுரப்பதை அதிகரிக்கச் செய்யும். எலுமிச்சை, நெல்லி, தக்காளி, பாட்டிலில் அடைக்கப்பட்ட செயற்கை பானங்கள், கொழுப்புசத்து மிகுந்த உணவுகளை இரவு உணவில் கண்டிப்பாய் தவிர்த்து விடுங்கள்.

* இரவில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். இரவு உணவிற்குப் பிறகு மெல்ல நடையும், அமைதியும் `ஆசிட்’ சுரப்பதை வெகுவாய் கட்டுப்படுத்தும்.

* அதிக உணவு `அசிடிடி’க்கு ஒரு காரணம். சிறு சிறு உணவாக அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.

* வாரத்திற்கு இருமுறைக்கு மேல் `அசிடிடி’ இருந்தால் உடனடி மருத்துவரை அணுகுங்கள்.

* இரவில் ஆல்கஹால் மிகவும் கெடுதலே.

* முட்டியை மடக்கி கீழே குனியுங்கள். உடலை முன் மடித்து குனியாதீர்கள்.

* இதற்கான மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்துங்கள்.

Related posts

அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது….

sangika sangika

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்

admin

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?

admin

Leave a Comment