அலங்காரம்

சாட்டின் ரிப்பனில் தலையலங்காரப் பொருட்கள்

சூர்யா வரதராஜனின் கைவண்ணத்தில் தயாராகிற ஹேர் பேண்ட், ஹேர் ராப் மற்றும் கிளிப்புகளை பார்க்கும் போது, மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே போகத் தோன்றுகிறது. கலர்ஃபுல்லான மணிகளைக் கோர்த்து, வழவழப்பான சாட்டின் ரிப்பன் கொண்டு அவர் டிசைன் செய்கிற தலை அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்கானவை.

அடிப்படையில நான் ஓர் ஓவியர். ஓவியத்தோட சேர்த்து நிறைய கைவினைப் பொருட்களையும் செய்யக் கத்துக்கிட்டேன். புதுமையா எந்தக் கைவினைப் பொருளைப் பார்த்தாலும் உடனே அதை என்னோட ஸ்டைல்ல மாத்தி கிரியேட்டிவா பண்ணிப் பார்ப்பேன். ஒருமுறை சென்னையில ரெண்டு பெரிய மால்கள்ல பெண் குழந்தைகளுக்கான ஹேர் பேண்ட், ஹேர் கிளிப் எல்லாம் பார்த்தேன். பார்க்கிறதுக்கு ரொம்ப சிம்பிளா இருந்தது. ஆனா, விலை அதிகம்.

அதைப் பார்த்ததும் வீட்டுக்கு வந்து அதே பொருட்களை என்னோட கிரியேட்டிவிட்டியை உபயோகிச்சு, இன்னும் அழகா பண்ணிப் பார்த்தேன். ஷாப்பிங் மால்ல போட்டிருந்த விலையில பாதிக்கும் குறைவா என்னால பண்ண முடிஞ்சது. அப்படிப் பண்ணினதை எனக்குத் தெரிஞ்சவங்களோட பெண் குழந்தைங்களுக்கெல்லாம் கொடுத்தேன். அவங்க உபயோகிக்கிறதைப் பார்க்கிறவங்க என்கிட்ட தேடி வந்து வாங்கிட்டுப் போனாங்க. அப்படித்தான் என் பிசினஸ் வளர்ந்தது…” என்கிற சூர்யா, ஆரத்தி தட்டுகள், துணி பொம்மைகள் போன்றவற்றையும் செய்கிறார்.

தலை அலங்காரப் பொருட்களுக்கான Base கடைகள்ல ரெடிமேடா கிடைக்கும். அதை வாங்கிட்டு வந்து, நம்ம கற்பனைக்கேத்தபடி சாட்டின் ரிப்பன், முத்துக்கள், மணிகள் வச்சு அலங்கரிக்க வேண்டியதுதான். ஆயிரம் ரூபாய் முதலீடு இருந்தா போதும். ஒவ்வொண்ணுலயும் 50 பீஸ் பண்ணிடலாம். ஒருநாளைக்கு 25 பீஸ் பண்ண முடியும். குறைஞ்சது 20 ரூபாய்லேருந்து விற்கலாம். அலங்காரத்தையும் உபயோகிக்கிற பொருட்களையும் பொறுத்து விலை கூடும். 50 சதவிகித லாபம் நிச்சயம்.

பெண் குழந்தைகள் இருக்கிற எல்லா வீடுகள்லயும் வாங்குவாங்க. பெண் குழந்தைகளுக்கு அன்பளிப்பா கொடுக்கவும் ஏற்றது. ஃபேன்சி ஸ்டோர்கள்ல விற்பனைக்கு கொடுக்கலாம். கண்காட்சிகள்ல வைக்கலாம்…” என்பவரிடம் ஹேர் பேண்ட், ஹேர் ராப், ஹேர் கிளிப் மூன்றிலும் தலா 2 மாடல்களை கற்றுக் கொள்ள தேவையான பொருட்களுடன் சேர்த்து கட்டணம் 500 ரூபாய்.

Related posts

டீன்ஏஜ் பெண்களின் அழகுக் கவலை

admin

நீள்வட்ட முகத்திற்கான அருமையான சில மேக்கப் டிப்ஸ்!!

admin

மணப்பெண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும்?

admin

Leave a Comment