இரத்தத்தை சுத்தமாக்கும் இலந்தை பழம்

பொதுவாகவே ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடக்கியுள்ளன. குறிப்பாக நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமீன்கள் அடங்கியிருப்பதால் அவை எளிதில் ஜீரனமாகி, இரத்தில் கலக்கிறது.

அந்த வகையில் இலந்தை பழத்தில் மருத்துவ குணங்கள்
அதிகம் அடங்கியுள்ளன. ஆனால் நகர் புரங்களில் இலந்தை அவ்வளவாக இல்லை என்று தான் சொல்லலாம். எங்கோ ஒரு மூளையில் தான் இலந்தை விற்கப்படுகிறது.

ஆனால் கிராமங்களில் இன்றும் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உன்னும் பழமாக தான் இலந்தை உள்ளது. இப்பழம் ஏழைகளின் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

இலந்தையில் இரண்டு வகை உண்டு, ஒன்று நாட்டு இலந்தை, காட்டு இலந்தை. இந்தப் பழத்தில் சிலவற்றில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும் இருக்கும். இலந்தையில் வைட்டமீன் ஏ, பி, சி என்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. சுண்ணாம்புச் சத்தும், இரும்பு சத்தும் அதிகம் உள்ளது.

இலந்தை கிடைக்கும் சிசன்களின் இதை எடுத்து கொள்ளலாம். எலும்புகள் உறுதி பெறுவதோடு, பற்களும் உறுதி பெறும். வாந்தி, மயக்கம், தலைசுற்றல் என பல நோய்களுக்கு மருந்தாக இலந்தை பயன்படுகிறது. மாரடைப்பு உள்ளவர்கள் இப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

சிலர் எதை சாப்பிட்டாலும் செரிக்காமல் அவதிப்படுவர். இவர்கள் இலந்தையுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டு வர வயிறு இலகுவாகி செரிமான பிரச்னையிலிருந்து விடுபடலாம். பெண்களுக்கு மாதவிடைக் காலங்களில் வரும் வயிற்றுப் போக்கை தடுக்கவும் இந்தப் பழம் பயன்படுகிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தியும் இலந்தைக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *