அலங்காரம்

உலகெங்கிலும் அழகை அதிகரிக்க பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!!!

அழகு, இன்றைய தினத்தில் உலகெங்கிலும் படித்த, நாகரீக மனிதர்களில் 90% மக்கள் உறவை முடிவு செய்வது இந்த அழகு தான். வெங்காயம், தக்காளி, காய்கறிகளை போல, மனிதர்களையும் தோற்றத்தை வைத்து எடைப்போடும் காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். மாத வருமானத்தில் அழகை சீர்காக்க என ஓர் தனி பகுதியை ஒதுக்கி வாழும் மக்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் குறிவைத்து தான் என்னவோ, உலகம் முழுக்க சில வினோதமான அழகு சாதன கருவிகளும், முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயற்கைக்கு புறம்பாக கூட சில கருவிகளை பயன்படுத்துகிறார்கள். அவரவர் மரபணு பொறுத்து தான் உடல் வடிவம் உருவாகிறது, உடற்பயிற்சி செய்தாலும் கூட ஃபிட் ஆகுமே தவிர அதன் நிலை மாறாது.

இவர்கள் அதை மாற்ற தான் சில வினோத அழகு சாதன கருவிகளை கண்டுபிடித்துள்ளனர், இவற்றில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ஆசியாவிலும், குறிப்பாக சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….

அழகை அதிகரிக்கும் முகமூடி

யாரும் கொள்ளைக்காரர்கள் என பயந்துவிட வேண்டாம். இது முக அழகை அதிகரிக்க உதவும் முகமூடி. இது முகத்தின் தசை பயிற்சிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. என்றும் இளமையாக இருப்பதற்காக இதை பயன்படுத்துகிறார்கள். இதன் வேலையே தசைகளின் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து இறுக்கமாக்குவது தான். இதன் விலை $23 டாலர்கள். இதன் பெயர்

மார்பகத்தை பெரிதாக்க உதவும் குக்கீஸ்

இந்த குக்கீஸில் மிரிஃபிக்கா பிளான்ட் எனப்படும் பெண்களின் ஹார்மோன்களை தூண்டும் இயற்கை பொருள் சேர்க்கப்படுகிறதாம். இவை பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கின்றன. இந்த குக்கீஸ் சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக வளரும் என நம்புகிறார்கள். இதன் விலை $21 டாலர்கள், பெயர் எப் – கப் குக்கீஸ்.

மூக்கை நேராக்குவதற்கு

இது ஓர் கிளிப் போன்ற வடிவில் இருக்கிறது. மூக்கை நேராக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயங்குபவர்கள் இதை பயன்படுத்தலாம் என கூறுகிறார்கள்,. இதன் பெயர் ஹானா ட்சன் நோஸ் ஸ்ட்ரெய்ட்னர். பார்க்க வலி ஏற்படுத்தும் வகையில் இருப்பது போல காட்சியளித்தாலும், இது பயன்படுத்தும் போது அவ்வளவு வலி தவறுவதில்லை என பயன்படுத்துபவர்கள் கூறுகிறார்கள்.இதன் விலை $43 டாலர்கள்.

அழகாக சிரிக்க பயிற்சி

சிரிக்கும் போது வாய் அழகாக மற்றும் சுருக்கம் இன்றி காட்சியளிக்க இதை பயன்படுத்துகிறார்கள்.இது பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட கருவி ஆகும். இது, முகத்தின் தசைகள் இறுக்குமாவதற்கும் உதவுகிறதாம். இதன் விலை $56 டாலர்கள். இதன் பெயர் Face Slimmer Exercise Mouthpiece.

மார்பக மசாஜ் கருவி

மனித கை போல இருக்கும் இந்த ஸ்டிக், மார்பக மசாஜ் கருவியாம். மார்பகத்தின் தசைகளுக்கு பயிற்சி தர இதை பயன்படுத்துகிறார்கள். அழகான மார்பக தோற்றம் பெற இதை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் விலை $52 டாலர்கள் மற்றும் இதன் பெயர் Breast Gymnastic hand massager.

முக சுருக்கங்களை போக்க உதவும் ஹேர் ரிப்பன்

கரக்குரி (Karakuri) என்பது இதன் பெயர். நெற்றியின் இருபுறமும் சீப்பு போல வடிவம் சேர்க்கப்பட்டுள்ள இந்த ரிப்பனை இறுக்கமாக பொருத்திக்கொள்வதால், முக சுருக்கம் குறைக்கப்படுகிறதாம். இதன் விலை $89 டாலர்கள்.

அழகாக முகத்தை அகலப்படுத்த

இதை வாயில் பொருத்தி, இரு காதுகளில் மாட்டிக்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முகத்தின் சுருக்கத்தை போக்க உதவுவதாக பயன்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் பெயர் Bigan Beauty Face Expander, விலை $89 டாலர்கள்.

மார்பக முலைகளை அழகாக்க

சிலருக்கு மார்பக முலைகள் பார்க்க அழகாவும், எடுப்பாகவும் இருக்காது, இதை சரி செய்து, அழகாக வைத்துக்கொள்ள, இந்த கருவியை பயன்படுத்துகிறார்கள். இது மார்பக பகுதியை மெல்ல உறிஞ்சி இறுக்கமாக எடுப்பான வடிவை ஏற்படுத்துமாம். இதை தினமும் ஓரிரு நிமிடங்கள் பயன்படுத்தினால் போதுமான கூறுகிறார்கள். இதன் விலை $67 டாலர்கள், பெயர் – Inverted Nipple Suction Dream Charm Adjuster.

நாக்கு பயிற்சிக்கு

நாக்கிற்கு பயிற்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி, முக தசைகளை இறுக்கமாக வைத்துக்கொள்வதற்கும் பயன்படுகிறதாம். இதை வாயில் மாட்டிக்கொண்டு நாவிற்கு பயிற்சி அளித்தல் வேண்டும். இதன் விலை $51 டாலர்கள், பெயர் – Kuwate Sukkiri Tongue Exerciser.

அழகான கண் இமைகளுக்கு

உபயோகிக்க கடினமாக காட்சியளிக்கும் இந்த கருவி, அழகான இரட்டை கண் இமைகள் (Eyelids) பெற உதவுகிறதாம். கன்னத்தில் ஒரு ஸ்டிக்கை ஊன்றி, மறு ஸ்டிக்கை இமை பகுதியில் தேய்த்து பயிற்சி செய்தல் வேண்டுமாம். இதன் விலை $45 டாலர்கள், பெயர் – Futae Compass Make Up Eyelid Brush.

Related posts

பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

admin

கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

admin

தற்காலிக பச்சையை குத்தி கொள்ள‌….

sangika sangika

Leave a Comment