இயற்கை மருத்துவம்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் எள்

மனிதன் முதன் முதலில் எண்ணெய்ப் பொருளாக பயன்படுத்தியது எள் விதைகளைத்தான். உலகம் முழுவதும் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படும் பெருமை மிக்கது எள். இதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்.

ஆசியப் பகுதிகளான பர்மா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக விளையும் பொருட்களில் எள்ளும் ஒன்று. ஆரோக்கியம் வழங்கும் சத்துப் பொருட்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், வைட்டமின்கள் எள்ளில் காணப்படுகிறது. எள் விதைகள் அதிக ஆற்றல் தரும் உணவுப் பொருளாகும்.

100 கிராம் எள் விதையில் 573 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இதிலுள்ள அதிகப்படியான ஆற்றலுக்கு காரணம் கொழுப்புச் சத்து தான். ‘ஆலியிக் அமிலம்’ எனப்படும் கொழுப்பு அமிலம் எள்ளில் சரிபாதி அளவு காணப்படுகிறது.

இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பை ரத்தத்தில் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும். எளிதில் ஜீரணமாகும் புரதம் எள் ளில் நிறைந்துள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலம் இதுவாகும். 100 கிராம் எள் விதையில் 18 கிராம் புரதம் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சீசமோல், சீசமினால், பியுரைல் மீதேன்தையோல், குவாஜகால், பரனியோல், வினைல்குவாகால், டீகாடியனால் போன்ற ஆரோக்கியம் வழங்கும் மூலக்கூறுகள் எள் விதையில் கணிசமாக உள்ளது. இவை நோய் எதிர்ப்பு பொருட்களாக செயல்படுபவை. உடலுக்கு தீங்கு தரும் பிரீரேடிக்கல்களை விரட்டி அடிக்க வல்லவை.

வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. பிகுழும வைட்டமின்களான நியாசின், போலிக் ஆசிட், தயாமின், பைரிடாக்சின், ரிபோபிளேவின் போன்றவையும் சிறந்த அளவில் உள்ளன. 97 மைக்ரோகிராம் போலிக் ஆசிட் 100 கிராம் எள்ளில் உள்ளது.

இது டி.என்.ஏ. வளர்ச்சி மாற்றத்திற்கு அவசியமான வைட்டமினாகும். நியாசின் வைட்டமின், ரத்தத்தில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும். மேலும் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, கவலை மற்றும் நரம்பு வியாதிகளை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், மக்னீசியம், செலினியம், தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுப்பொருட்களும் மிகுதியாகவே காணப்படுகின்றன. இவை ரத்த சிவப்பணு உற்பத்தி, நொதிகளின் செயல்பாடு, ஹார்மோன் உற்பத்தி, இதய செயல்பாடு என பல்வேறு பணிகளில் பங்கு வகிக்கும் முக்கிய தாதுக்களாகும்.

Related posts

இவ்வளவு நன்மைகளை ஒருங்கே தரும் இந்தப் பழம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

sangika sangika

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

admin

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம்

admin

Leave a Comment