தண்ணீர் தாராளமாய் குடிங்க

நிறைய தண்ணீர் பருகுவது நல்லது என்று பலரும் பரிந்துரைக்கிறார்கள். அது முற்றிலும் உண்மையே. எப்போதெல்லம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம்கொள்கிறதோ, அப்போதே நமக்குத் தாகம் ஏற்பட்டுவிடுகிறது.

உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளும் வகையில், உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களில் இருந்தும் பல்வேறு அறிகுறிகள் வெளியிடப்படுகின்றன. அந்த அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

ஆனால், உடம்புக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டால் அதில் என்ன நிகழும் என்ற விவரம் பலருக்குத் தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளைத் தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் பல வியாதிகள் தொடக்கத்திலேயே அடக்கப்படுகின்றன.

தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண வழிகளில் தண்ணீர் முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே 70 சதவீதமாகும். உடலின் அனைத்துப் பகுதிகளிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை, நுரையீரல், போன்ற திரவங்களிலும், செரிமான முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்புகளிலும் அதிகமாகவே அடங்கியுள்ளது.

நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் பொதுவாக மென்மையாகவும், நிலத்தடி நீர் கடின நீராகவும் இருக்கும். அதாவது நிலத்தடி நீர் கடின நீராகவும் இருக்கும். அதாவது நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிறைய அடங்கியுள்ளன. கடின நீருடன் ஒப்பிடும் போது மென்னீர் நோய்களைக் குணப்படுத்தும்.

அதே நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போனால் அதுவே உடல் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *