மருத்துவ கட்டுரைகள்

சர்க்கரையைக் குறைத்தால் நல்லது

மனிதர்கள் தங்கள் அன்றாட உணவில் சர்க்கரை அளவை சரிபாதியாகக் குறைத்தால் நல்லது என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் உண்ணும் உணவில் இருந்து நம் உடலுக்குக் கிடைக்கும் சக்தியின் அளவை கலோரிகள் என்று கணக்கிடுகிறோம்.

அந்த கலோரி கணக்கின்படி, தற்போது ஒருவர் உட்கொள்ளும் உணவில் சேர்க்கப்படும் செயற்கைச் சர்க்கரையின் அளவானாலும், பழச்சாறு, தேன் போன்றவற்றில் இயற்கையிலேயே இருக்கும் சர்க்கரையானாலும், ஒட்டுமொத்த உணவின் கலோரி அளவில் 10 சதவீதம் வரை சர்க்கரையில் இருந்து ஒருவர் பெறலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதுதான் அதிகபட்ச சர்க்கரை அளவாக ஒருவரின் உணவில் இருக்க வேண்டும் என்றும், அதுவே ஆரோக்கியமான உணவுமுறை என்றும் இதுவரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் பரிந்துரைத்து வந்தனர்.

ஆனால் தற்போது, இந்த ஒட்டுமொத்த சர்க்கரையின் அளவை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கவேண்டும் என்று இங்கிலாந்தின் உணவுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

ஒருவரின் உணவில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவரது உடல்பருமன் கூடுவதுடன், அவருக்கு சர்க்கரை நோயும், இதய நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிப்பதாக இந்த அமைப்பின் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.. சர்க்கரையைக் குறைப்பதே பல சங்கடங்களைத் தவிர்க்கும் என்பது இவர்களின் கருத்து.

Related posts

நெஞ்சுவலி‬ ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை

admin

கட்டாயம் புறக்கணிக்கக்கூடாத உயர் இரத்த அழுத்தத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள்!!!

admin

பெண்களுக்கு ஏற்படும் இதயநோய்

admin

Leave a Comment