உணவுப்பொருட்களை கெடாமல் பாதுகாக்கும் எலுமிச்சை

வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் நாம் பல்வேறு பொருட்களை வைப்பது வழக்கம். பெரும்பாலும் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் கிருமிகளால் தாக்கப்படுவதால் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.

அந்நிலையில் பஞ்சினை சிறிய பந்துபோல் சுருட்டி அதை எலுமிச்சை சாற்றில் நனைத்து அல்லது ஸ்பாஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் சில மணி நேரங்கள் வைத்திருக்க துர்நாற்றம் விலகும்.

* வெண்மை நிறமுடைய காய்கறிகளை சமைக்கும் போது அவை எளிதில் செம்மையாக மாறுவது இயற்கை. உதாரணம் காலிபிளவர். இவற்றை சமைப்பதற்கு முன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றைப் பரவலாகப் படும் படி தெளித்து வைத்திருந்து சமைத்தால் அவற்றின் வெண்மை நிறம் மாறாமல் இருக்கும்.

* காய்கறிகளை நறுக்க உபயோகப்படும் பலகை வெங்காயம், பூண்டு, இறைச்சி ஆகியவற்றை நறுக்கியதால் ஏற்பட்ட நாற்றம் போக எலுமிச்சம்பழத்தை துண்டித்து ஒரு பகுதியைக் கொண்டு அப்பலகையை நன்கு தேய்ப்பதாலோ அல்லது எலுமிச்சை சாறு கொண்டு தேய்த்துக் கழுவுவதாலோ நாற்றம் நீங்கப் பெறும்.

* சமையல் அறையில் எறும்புகள், பூச்சிகள் துளையிட்டு பெருகுவதால் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை உள்ளே விடலாம்.

* கடைகளில் வாங்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவை அவற்றின் மேல் படிந்துள்ள அழுக்காலும், அவற்றிற்கு இடப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றாலும் விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பது இயற்கை.

இதைப் போக்க ஒரு தெளிப்பானில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி காய்கறிகள், கீரைகள், கனிகள் இவற்றின் மீது தெளித்து சிறிது நேரம் வைத்திருந்து கழுவிவிட்டுப் பயன்படுத்துவதால் அவற்றின் மீதுள்ள நச்சுக்கள், கிருமிகள் விலகி நல்ல மணத்தையும் பெற்று விடும்.

* நவநாகரீக உலகில் சிறுவர் மட்டுமின்றி பெரியவர்களும் டப்பாக்களிலும், பைகளிலும் அடைத்து வைக்கப்பட்ட ரசாயனக்கலவை மிக்க உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. இதுதவிர்க்க இயலாததாகவும் மாறிவிட்டது.

இந்த உணவுப் பொருட்களுக்கு இடப்பட்ட செயற்கை வண்ணங்களும், நீண்ட நாள் உபயோகத்தில் இருக்கும் பொருட்டு கலக்கப்பட்ட ரசாயனப் பொருள்களாலும் ரத்தத்தில் நச்சுப்பொருட்கள் சேர்ந்து உடலையும், சீரண உறுப்புகளையும் கெடுக்கின்றன.

இதைத் தவிர்க்க அடிக்கடி எலுமிச்சை சாறு குடிப்பது நலம். இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் நீங்கி ரத்தம் சுத்தமாகி ஆரோக்கியம் நிலைபெறுகிறது. இது போன்ற வேறு பல மருத்துவ குணங்கள் எலுமிச்சையில் நிறைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *