கழுத்து வலி வராமல் தவிர்க்க வழிகள்

தற்போது கழுத்துவலி இளம் வயதினரை அதிகமாக பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்க வழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் வேலை செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.

கழுத்துவலி வராமல் இருக்க உயரமான தலையணை, சமன் இல்லாத படுக்கையை உபயோகப்படுத்தக்கூடாது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோவில் நீண்டதூர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

அதிக எடை தூக்க கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகள் செய்யலாம். இது கழுத்தை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்தும். அதிக நேரம் ஒரே இடத்தில் குனிந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். எங்கள் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் கழுத்து வலியை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *