பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

பளபளக்கும் ஐ-ஷாடோக்கள் இல்லாமல் பார்டிக்கு மேக்-அப் போட்டால் அதில் முழுமை இருக்காது. அதுவும் பண்டிகை காலம் களை கட்டியிருக்கும் இவ்வேளையில் உங்கள் கண்கள் சரியான முறையில் ஜொலித்திட வேண்டாமா? சாயந்தர வேளை பார்டிக்கு செல்வதற்கு பளபளக்கும் ஐ-ஷாடோவை கண்களுக்கு தடவிக் கொண்டால் உங்கள் கண்களை அது ஜொலித்திட வைக்கும். சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் பளபளக்கும் ஐ-ஷாடோவை தடவிக் கொண்டு கண்களுக்கு விண்டேஜ் ஸ்டைலை சேர்த்திடுங்கள். பளபளக்கும் ஐ-ஷாடோவின் பயன்பாடு முழுமை அடைய ஐ-ஷாடோவின் தேர்வு மற்றும் நீங்கள் பயன்படுத்தும் ஐ-லைனரின் வண்ணம் ஆகியவைகள் மிகவும் முக்கியமானது. ஐ-ஷாடோவின் வண்ணத்தை உங்களின் சரும நிறத்தை பொருத்தும் ஆடைகளின் வண்ணத்தை பொருத்தும் தேர்ந்தெடுக்க வேண்டும். பளபளக்கும் ஐ-ஷாடோவை பயன்படுத்தி உங்களுக்கு எது பொருந்துகிறது என்பதை ஆய்வு செய்வதற்கு தைரியமாக சில இடர்பாடுகளை எடுக்கலாம்.

கண்களுக்கு பளபளக்கும் வகையில் மேக்-அப் செய்து கொள்ளும் போது கூட்டத்தில் நீங்கள் தனியாக பளிச்சென்று தெரிவீர்கள். இது உங்களை கவர்ச்சியாகவும் காட்டும். பளபளக்கும் ஐ-ஷாடோவை பயன்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது. புதிது புதிதாக சுவாரசியமான மேக்-அப்களை முயற்சி செய்து பார்க்க விரும்புபவர்கள் பளபளக்கும் ஐ-ஷாடோக்கள் மற்றும் மெட்டாலிக் ஐ-ஷாடோக்களை பயன்படுத்தலாம். உங்களுக்கு எது ஒத்துப் போகிறது என்பதை கண்டறிய பளபளக்கும் ஐ-ஷாடோக்களை தடவிப் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு கொஞ்சம் கவனம், விழிப்பு மற்றும் பொறுமை தேவைப்படும். அதிக சிரமமில்லாமல் பளபளக்கும் ஐ-ஷாடோக்களை பயன்படுத்திட சில எளிய டிப்ஸ்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

பளபளக்கும் ஐ-ஷாடோவை பயன்படுத்துவதற்கு பளபளப்பு வண்ணத்தை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானதாகும். நீங்கள் தேர்ந்தெடுக்க பல வித வண்ணங்களில் ஐ-ஷாடோக்கள் உள்ளது. ஐ-ஷாடோக்களும் பளபளக்கும் வண்ணங்களும் சேரும் போது பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும். தங்கம், வெள்ளி, கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு போன்றவைகள் எல்லாம் நல்ல தேர்வு.

நீங்கள் தேர்வு செய்யும் பளபளப்புகளின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் முக்கியமானதாகும். அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போலவே நீங்கள் பயன்படுத்தும் அழகு பொருட்களின் தரத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் அல்லவா? நீண்ட நேரம் நீடித்து நிற்கும் ஐ-ஷாடோக்களை வாங்குங்கள். நல்ல ப்ராண்ட்டட் ஐ-ஷாடோக்களை தேர்வு செய்யுங்கள்.
பளபளக்கும் ஐ-ஷாடோ உங்களுக்கு பொருத்தமாக இருப்பதற்கு நல்ல தரமுள்ள ஐ-ஷாடோ ப்ரைமரை பயன்படுத்துங்கள். இதனை பயன்படுத்தினால் பளபளக்கும் ஐ-ஷாடோவை பயன்படுத்துவதற்கு உங்கள் கண்களை தயார்படுத்தும்.

பளபளக்கும் ஐ-ஷாடோக்களை பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் கண் இமை ரோமங்களில் ஜெல் அல்லது வேசலினை தடவினால் உங்கள் தோற்றத்தின் கவர்ச்சி அதிகரிக்கும். போதுமான அளவில் ஜெல் தடவினால் பளபளப்பு நன்றாக ஒட்டிக் கொள்ளும். இது முழுமையை ஏற்படுத்தி கொடுக்கும்.

உங்கள் பளபளப்பு மேக்-அப் பெட்டியில் ஐ-ஷாடோ க்ரீம் இருப்பது ஒரு நல்ல ஐடியா. பளபளக்கும் ஐ-ஷாடோவை பயன்படுத்துவதற்கு முன்பு ஐ-ஷாடோ க்ரீமை பயன்படுத்துங்கள். இதனால் நீங்கள் தடவும் பளபளப்பு முகம் முழுவதும் பரவாமல் இருக்கும்.

பளபளப்பான ஐ-ஷாடோவை தடவுவதற்கு கூடுதல் கவனம் தேவை. நல்லதொரு Q-டிப் அல்லது தடவுவதற்கான கருவியை பயன்படுத்தி இதனை தடவவும். கண் இமைகளுக்கு தடவும் முன் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு முதலில் கண் இமை ரோமங்கள் ஆரம்பிக்கும் கோட்டில் தடவுங்கள். பொறுமையாக இருந்து சுத்தமாக செய்து முடியுங்கள்.

அடிப்படையான வண்ணத்தை முதலில் தடவினால் நீங்கள் தடவும் பளபளப்பான ஐ-ஷாடோ இன்னமும் கவர்ச்சியாக இருக்கும். புகை மூட்டலான கண்களை பளிச்சிட வைக்க நீங்கள் பளபளக்கும் ஐ-ஷாடோக்களை பயன்படுத்தினால் அடிப்படை வண்ணங்களில் இருந்து தொடங்குங்கள். அடிப்படை வண்ணங்களை பயன்படுத்திய பின்பு பளபளப்பை தடவுங்கள். ஆனால் அதிகமாக தடவுங்கள்.

பளபளக்கும் ஐ-ஷாடோக்கள் பயன்படுத்துவதில் பெரிய தர்ம சங்கடம் ஒன்று உள்ளது. பளபளப்புகள் உங்கள் முகம் முழுவதும் பரவி விடும். மேக்-அப் முடிந்த பின்பு கூட இந்த பளபளப்புகள் போகவில்லை என்றால் மாஸ்கிங் டேப்களை பயன்படுத்தி அவைகளை நீக்கிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *