சித்த மருத்துவம்

சித்த வைத்தியம்

செம்பரத்தம் பூ

இந்தப்பூவில் 5 பூவின் இதழ்களை 200 மில்லி நீரில் விட்டுக் கஷாயமாக்கி சர்க்கரை கூட்டி 2 வேளை 5 நாட்கள் பருகி வர இதயம் வலிமை பெறும்.

தும்பைப்பூ:

இம்மலரை கஷாயம் வைத்துப் பருகுவதால் காய்ச்சல் நீங்குவதோடு தொண்டைக்கட்டும் இளகும். இம்மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர ஜலதோஷம் சீதள சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

மாதுளம் பூ:

உலர்ந்த பூவை இடித்துத் தூள் செய்து வேளைக்கு 10 கிராம் தயிரில் போட்டு கலக்கி தினம் 2 வேளை பருகி வர இரத்தபேதி, சீதபேதி நீங்கி சிறுகுடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். பெண்களின் கருப்பை சுத்தம் அடையும்.

மருதோன்றி பூ:

உறக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த மலரை தலையணைக்குப் பக்கத்தில் வைத்து உறங்கச் செல்ல 10 நிமிடத்தில் உறக்கம் வரும்.

Related posts

ஆகாயத்தாமரை

admin

வலிகளை அகற்றும் உணவு முறை

admin

ஆண்மை குறைபாட்டை போக்கும் எளிய சித்த மருத்துவ குறிப்புகள்

admin

Leave a Comment