இதய தமனி அடைப்புக்கு

ஈறுகள் பலம்

சிறிது உப்புத் தூளில் எலுமிச்சை சாறு கலந்து, கைவிரலால் பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து விட்டால் ஈறுகள் பலம் பெறும்.

இரத்த இருமல்

தூதுவளை இலை, ஆடாதொடை இலை இந்த இரண்டையும் எடுத்து பிட்டவியல் (புட்டு மாவு அவிப்பது போல்) செய்து, பிழிந்து 400 மில்லி சாறு (2 டம்ளர்) எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கேரிஷ்டம் 2 கிராம், திப்பிலி 2 கிராம், சாம்பிராணி 2 கிராம் அனைத்தையும் காய வைத்து தூள் செய்து அச்சாற்றில் கலந்து கொடுத்து வந்தால் இரத்த இருமல் நீங்கும்.

இதய தமனி அடைப்பு

இதய தமனி அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 1 தேக்கரண்டி வெங்காயச்சாற்றை 4 வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இமை முடி, புருவம்

இமை முடி மற்றும் புருவங்கள் அடர்த்தியாக இல்லாவிட்டால், இரவு படுக்கச் செல்லும் முன் சிறிதளவு விளக்கெண்ணெய்யை இமையில் மற்றும் புருவங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வறட்டு இருமல்

வறட்டு இருமல் தொண்டை, நெஞ்சு, வயிறு அமைத்தையும் ரணமாக்கிவிடும். 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், 1 எலுமிச்சைச் சாறு பிழிந்து, 1 மேஜைக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

ஜலதோஷம்

வெதுவெதுப்பான பீட்ரூட் சாற்றை மூக்கினுள் தடவினால் ஜலதோஷம் சரியாகி விடும்.
தேன் ஜலதோஷத்தை குணப்படுத்தும்.

கல்லீரல்

கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தேனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடலாம்.
கல்லீரலில் ஏற்படும் எல்லாவித நோய்களையும் தேன் குணப்படுத்தும்.

காமாலை

கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து, அரைத்து தினமும் காலையில் 1 நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் காமாலை குணமாகும்.
மஞ்சள் கரிசிலாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு 2 முறைகள் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான நோய்கள் வராது.
தினமும் 2 வேளை தேன் குடித்தால் எல்லாவிதமான காமாலை நோய்களும் குணமாகும்.

பற்களில் கறை

சிறிது எலுமிச்சைச் சாறுடன் உப்புத்தூள் கலந்து கறை உள்ள இடங்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கறை நீங்கி விடும்.

 

காதுவலி

காதில் ஏற்படும் வலிக்கு காற்றொட்டிக் கொழுந்து, பூண்டு, வசம்பு ஆகியவற்றைசம எடை எடுத்து, அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணெய் போதிய அளவு ஊற்றி, காய்ச்சி இறக்கி ஆறிய பிறகு இளஞ்சூட்டுடன் காதில் ஒரு துளி விட்டால் காதுவலி நாளடைவில் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *