சித்த மருத்துவம்

கடுகுரோகிணி

கடுகுரோகிணி: சுரத்திற்கு பயன்படும் கடுகுரோகிணி இமயமலையில் வளர்கிறது. மேல்நாட்டு ஆல்ப்ஸ் மலையில் கடுகுரோகிணியை ஒத்த குணமுள்ள ஜென்சன் மூலிகை என்று கூறுவர். இதன் மறுபெயர் மஞ்சள் ஜென்சன் ஆகும்.  இதிலுள்ள மருந்து உப்புகள் அதிகம் நவீன மருத்துவ துறையில் பயன்படுகிறது. இந்த மூலிகையின் ஒரு பிரிவிலிருந்துதான் நவீன மருத்துவத்துறையில் பயன்படும் வெளி உபயோக மருந்தான ஜென்சன் வயலெட் செய்கிறார்கள். இச்செடியானது கிழங்கு போன்ற கெட்டியான வேருடையது. இமயமலைப்பகுதியில் ஏறத்தாழ 2700 முதல் 4500 மீட்டர் உயரத்தில் இயற்கையாகவும், பயரிட்டும் இவை வளர்கின்றன. குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் இவை கிடைக்கின்றன. இலைகள் சிறியதாக நீண்டு பட்டைக்கத்தி போன்ற தோற்றமளிக்கும். கடுகுரோகிணியின் பூவானது வெளுத்த மற்றும் இளம் நீல நிறங்களில் உள்ளன. பழங்கள் முட்டை வடிவில் கேப்ஸ்யூல் போல் காட்சியளிக்கும். இச்செடியின் வேர்பகுதி மருத்துவக் குணம் கொண்டது. 

Related posts

CHOLESTERINUM – கோலஸ்ரேலியம் – இது கொழுப்பில் இருந்து எடுத்து வீரியம் செய்யப்பட்து.

admin

வாழைத்தண்டு.வாழைப்பூ: மருத்துவ நன்மைகள் தெரியுமா?

admin

கழுத்து வலிக்கு எளிய சித்த மருத்துவம்

admin

Leave a Comment