சரும பாதுகாப்பு டிப்ஸ்

* வறண்ட சருமத்தை பப்பாளி மற்றும் வாழைப்பழ பேஸ்ட் தடவி போக்கலாம்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து அத்துடன் மோர் சேர்த்து முகம் மற்றும் கைகளில் தடவினால் பளபளக்கும்.

*ஆல்மண்ட் பவுடருடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் மசாஜ் செய்யலாம்.

* தேங்காய் எண்ணெயை இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு கைகால்களில் தடவி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* எலுமிச்சைசாறுடன் தேன் கலந்து வெடிப்புள்ள பகுதிகளில் தடவி தீர்வு காணலாம்.

* சூரியகாந்தி எண்ணெயை முகத்தில் தடவி பளபளக்கச் செய்யலாம்.

* ஸ்ட்ராபெரி பழத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் தயாரித்து முகத்தில் மசாஜ் செய்து புத்துணர்வு பெறலாம்.

* ஆலிவ் ஆயிலுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து முகத்தில் தடவினால் வரட்சி நீங்கும்.

* வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கால்களை அதில் 10 நிமிடம் வைத்து கழுவினால் கால் வெடிப்புகள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *