சித்த மருத்துவ குறிப்புகள்

காதில் சீழ்வடிதல் குணமாக

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப் படுத்தவும் காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

நெஞ்சுவலி குணமாக

அத்திபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திபழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

சிலந்தி கடிக்கு மருந்து

தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

சீதபேதி குணமாக

புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும்.

வயிற்று நோய் குணமாக

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.

காதுவலி குணமாக

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

நுரையீரல் குணமாக

நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

வாதநோய் குணமாக

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

காலரா குணமாக

மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

மலச்சிக்கல் சரியாக

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *