புத்துணர்ச்சி அளிக்கும் துளசி

எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசியின் மருத்துவ மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் வராது.
ஜீரண சக்தியையும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் துளசி போக்கும்.

நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு வியாதி வராது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க, குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் நாற்றம் நீங்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு மைய அரைத்து, அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி மறையும்.

சிறுநீர்க்கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீரும் பருகி வந்தால் பிரச்சனை சரியாகும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தியின்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச்சாறில் தேன், இஞ்சி ஆகியவற்றைக் கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *