சித்த வைத்தியம்..

பெண்கள் சிலருக்கு கத்தை கத்தையாக முடி உதிரும். அவர்கள் தாமரை இலை சாற்றை சம அளவு நல்லெண்ணையில் கலந்து அடுப்பி லிட்டு கொதிக்க செய்ய வேண்டும். தைலம் மட்டும் மிதக்கும். அந்த தைலத்தை மட்டும் எடுத்து வைத்து கொண்டு முடி உதிர்கின்ற இடத்தில் தடவினால் முடி கருகருவென்று வளரும்.

அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

காது வலிக்கு வாழை பட்டையை தீயினால் வாட்டி சாறு பிழிந்து இரண்டு சொட்டு விட்டால் காது வலி குணமாகும்.

கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும்.

பீர்க்கு இலை சொறி, சிரங்குக்கு நல்ல மருந்து, இலையை அரைத்துப் பூசிக் குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.

பூச்சிக்கடி ஏற்பட்டு கடித்த இடத்தில் குப்பை மேனிக்கீரைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து தடவலாம். உடனே குணம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *