மருத்துவ கட்டுரைகள்

வாழ்க்கையை அழிக்கும் மதுபழக்கம்

மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. ஆண்களும் குடிக்கிறார்கள். பெண்களும் குடிக்கிறார்கள். சமீப காலமாக மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டது.

நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட, மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, கவுரவத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எத்தனையோ காரணங்கள் பின்புலமாக உள்ளன.

மது பழக்கம் எனும் அரக்கனை நீங்கள் விரட்டினால் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல, உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையும் மனம் வீசும் பூந்தோட்டமாக மாறும்.

மது என்றால் என்ன? மது குடிக்கும் பழக்கம் ஏன் ஏற்படுகிறது? மது குடிப்பதால் நமது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை அவர் அலசி, இங்கு தொகுத்து தந்துள்ளார். சரி வாருங்கள் மது அரக்கன் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

ஆல்கஹால் என்றால் என்ன!

மது `ஆல்கஹால்’ போதை தரும் ஒரு பொருளின் பெயர். சுத்தமான ஆல்கஹால் நிறம், மணம் அற்றது. தீ பற்றிக் கொள்ளும் திரவம். உடலுக்கு எந்தவிதமான சத்தியையும் தராது. நிமிடங்களில், குடிப்பவரின் மன நிலையினை மாற்ற வல்லது.

அதிகம் குடிக்க மூளை சற்று மரத்து மயங்கி போதை நிலையினைத் தரும். இது குடித்தவுடன் மூளையை சென்றடைவதால் உடலின் மற்ற பாகங்களில் எளிதாக தாக்குதலை ஏற்படுத்த வல்லது.

மூளையின் முன் பகுதியை தாக்குவதால் குடிப்பவர் மகிழ்ச்சி, சிரிப்பு, நல்ல ஆக்கப்பூர்வமான பேச்சினை முதலில் ஆரம்பிப்பார். குடியின் போதை அதிகரிக்கும் போது அவரே நிதானமற்ற பேச்சால் சண்டை இழுத்து மூர்க்கத்தனமாய் நடப்பார். எத்தனால் ஆல்கஹால் எனப்படும் இப்பொருளே பீர், ஒயின், சாராயம் போன்றவற்றில் காணப்படுவதாகும்.

யீஸ்ட் எனும் பொருளை சர்க்கரைதன்மை உள்ள உணவுகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் அடைத்து வைக்கும் போது அதில் புளிப்புத்தன்மையினை ஏற்படுத்துகின்றது. (2-ம்) ஒயின் என்பது திராட்சை பழத்திலிருந்து தயாரிக்கப்படுவது. பார்லி தானியத்தினை மாவாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படுவது பீர். சிடார் என்பது ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படுவது.

வோட்கா எனும் மது உருளை, பீட்ரூட் இவற்றில் யீஸ்ட் சேர்த்து தயாரிக்கப்படுவது. ஒவ்வொரு மது வகையிலும் அது எந்த அளவு புளிக்க வைக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்தே ஆல்கஹாலின் அளவு அமைகின்றது. சாராய வகையில் அதிலுள்ள நீர் தன்மையினைக் குறைத்து விடுவதால் பானத்தின் ஆல்கஹால் தன்மையும் ஒரு வித வாசனையும் கூடி விடுகின்றது.

மேற்கூறப்பட்ட பொருட்களை கலந்து யீட்ஸ் சேர்த்து புளிக்க வைத்து, காய்ச்சி, வடிகட்டி, பீர்பாட்டில்களில் அடைத்து அதனை மேலும் பக்குவப்படுத்துவது… என இதன் தயாரிப்பு முறைகள் நீண்டு கொண்டே செல்லும். அதன் தயாரிப்பு முறைகள், ஆல்கஹால் அளவிற்கேற்ப பிரிக்கப்பட்டு பெயரிடப்படுகின்றது.

போதையை கூட்டுவதற்காக `கள்ளச்சாராயம்’ சரக்கு என்ற பெயர்களில் மலிவாகக் கிடைக்கும். இந்த பானத்தில் என்னவெல்லாம் உபயோகிக்கின்றார்கள் என்று தெரியுமா? அழுகிய பழங்கள், பாட்டரி, அழுகிய மாமிசம் மற்றும் எலி, தவளை, தவறான மருந்து பொருட்கள் இவற்றினை சேர்த்து சாராயம் காய்ச்சி விற்கின்றனர்.

இத்தகைய தயாரிப்புகளே பலரின் திடீர் மரணங்களுக்கும், கண் பார்வை இழத்தலுக்கும் காரணமாகின்றது. சுமார் 80 சதவீதம் மக்கள் தரக்குறைவான சாராயத்தினை குடிப்பதால் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர்.

குடியின் பாதிப்பைப் பற்றி கூறப்படும். மருத்துவ காரணங்கள், பாதிப்புகள் அனைத்தும் ஆண், பெண் இரு பாலாருக்குமே பொதுவானதுதான். அதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் குடியினால் பாதிப்பு பெறும் பெண்களின் எண்ணிக்கை குறைவுதான்.

ஆயினும் கிராமப்புறங்களிலும், நாகரீகம் என்ற பெயரால் நகர்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி பெண்கள் இவர்களிடையே குடிபழக்கம் கூடிக் கொண்டே வருகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் விபரீதம் :

* 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் குடியோடு சம்பந்தப்பட்டவராகவே இருக்கின்றனர். பல லட்ச குழந்தைகள் வளரும் காலத்தில் குடியால் பாதிக்கப்பட்ட யாரேனும் ஒருவரை பார்த்தே வளர்கின்றனர். இதுவே பிற்காலத்தில் அவர்களையும் குடி பழக்கத்திற்கு ஆளாக்கி விடுகின்றது. குடியினால் இறப்பவர் தன் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியினை இழந்தே இறக்கின்றார்.

* மட்ட ரகமான சாராயத்தினாலும், கள்ள சாராயத்தினாலும் இறப்பவர்கள் அதிகம். 30 மில்லி `மெதனால்’ போதும் ஒரு மனிதனை உயிரிழக்கச் செய்ய.

* குடியின் பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் எயிஸ்ட்ஸ், டிபியில் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிக எண்ணிக்கை கொண்டதாக இருக்கின்றது.

* ஆல்கஹால் மட்டுமே 60 வகையான நோய் பாதிப்புகளுக்கும் உடல் காயங்களுக்கும் காரணமாகின்றது என கீபிளி கூறுகின்றது.

* ஆல்கஹல் அடிமைப்பட்டவர்கள் மனசோர்வு, மனநோய் வாய்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

* ஆல்கஹால் அடிமைப்பட்டவர்களில் 40 சதவீத மக்கள் மூளை, நரம்பு சம்பந்த பாதிப்பிற்கு உள்ளானவராய் இருக்கின்றனர்.

* 70 சதவீதம் சாலை விபத்துகள் குடித்து வண்டி ஓட்டுபவர்களாலேயே ஏற்படுகின்றன.

* கற்பழிப்பு வழங்குகளில் குடி முக்கிய பங்கு வகிக்கின்றது.

* 40 சதவீத சாலை விபத்து உயிரிழப்புகள் குடித்து வண்டி ஓட்டுபவர்களாலேயே ஏற்படுகின்றன.

* நீரில் மூழ்கி இறப்பவர்களில் 30 சதவிகிதத்தினர் குடிகாரர்களாக இருக்கின்றனர்.

* `ஆல்கஹால் விஷம்’ ஏறி இறப்பவர்கள் மிக அதிகம்.

* 30 சதவிகித தீ விபத்து உயிரிழப்புகள் குடியினாலேயே ஏற்படுகின்றன.

* மூச்சு குழாய் பாதிப்பில் ஏற்படும் இறப்புகளில் 15 சதவிகிதம் குடியினால் ஏற்படுகின்றன.

* ரத்த ஓட்ட பாதிப்பில் ஏற்படும் இறப்புகளில் 5 சதவீத குடியினாலேயே ஏற்படுகின்றன.

* பரம்பரை குடி தொடரும்.

குடிப்பழக்கத்திற்கு காரணங்கள்:

* அவர்கள் வளரும் சூழ்நிலை.

* சிறு வயதில் அவர்களுக்கு ஏற்பட்ட மனக்காயங்கள்

* தற்போதைய சூழ்நிலை

* பயமின்மை

* பரம்பரையில் குடிப் பழக்கம் இருப்பது.

* தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு மிகக்குறைவாக இருக்கும்.

குடிக்கு அடிமையாவது ஏன்?

குடி பழக்கம் பல உடல் ரீதியான பிரச்சினைகளை கொடுத்த போதிலும் விடாது குடியினை தொடர்ந்து குடிப்பவர்களை குடிக்கு அடிமையாகி விட்டனர் என்பர். இது அவர்களுக்கு ஒரு நோயாகி விடுகின்றது.

இவர்களுக்கு எப்போது குடிப்பது, எந்த அளவில் நிறுத்துவது என்பது தெரியாது. இதனால் அவர்களுக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் பிரச்சினைகள் ஏற்படும். இருப்பினும் அவர்களால் எதையும் தடுத்து நிறுத்த முடியாது.

இவர்களில் ஒரே நேரத்தில் அதிக அளவு குடிப்பார். குடி அடிமைத்தனம் அவரது மூளையும், மனமும், உடலும் படுத்தும் கட்டாயத்தினால் ஏற்படுகின்றது. குடியையே நினைத்து ஏங்க வைத்து விடுகின்றது. சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் இந்த ஏக்கம் ஓரிரு வருடங்களுக்குள் அவரை முழுமையாய் அடிமைப்படுத்தி விடுகின்றது.

குடி வேகமாய் மூளைக்கு செல்லும் தன்மை வாய்ந்தது. மூளைக்கு செல்லும் குடி நரம்பு மண்டல இரசாயத்தினை தாக்குகின்றது. இதனால் குடிப்பவர் தடுமாறி, உளறி பேசுவார். வேகமும், கோபமும் கொண்டவராகிறார். மேலும் குடி க்ளூடாமேனட் எனும் இரசாயத்தினை பாதிக்கும் பொது நரம்பு மண்டலம் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றது.

இதனாலேயே குடிக்கு அடிமைப்படுவரின் பேச்சும், நடையும் வலுவிழக்கின்றது. முதலில் குடியானது மூளையில் `டோபமின்’ என்ற இரசாயனப் பொருளை அதிகரிக்கச் செய்து குடிப்பவருக்கு மிக நல்ல உணர்வினை ஏற்படுத்தும்.

பின்னர் குடி பழக்கம் கூட கூட இந்த நிம்மதி உணர்வு அழிந்து விடும். ஆனால் குடிப்பவரோ இந்த நிம்மதியினைப் பெற தவிப்பார். அதற்காக மேலும் மேலும் குடித்து குடிக்கு அடிமையாகின்றார்.

Related posts

பாலியல் உறவு மூலம் பரவும் நீங்கள் அறியாத பல நோய்கள் !!!

sangika sangika

நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சர்க்கரை நோய்….

sangika sangika

புற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சியை கண்காணிக்க??எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

admin

Leave a Comment