ஆலோசனைகள்

உடலுக்கு நலம் தரும் சிகப்பு வைன்

மதுபானம் அருந்துவதால் உடலுக்கு கேடு வரும் என்று கூறினாலும், ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்த மதுபானமே மருந்தாகவும் மாறிவிடும். அப்படித்தான், தினமும் இரவு ஓர் அளவான சிவப்பு வைனை குடிப்பதன் மூலம் உடல் நலமாக இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகள், இளம் வயதினர் தொடக்கம் முதியோர் வரை இவ்வாறு சிவப்பு வைனை அருந்தி வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

பொதுவாக நீரிழிவு நோயால், இதயத்தைப் பாதுகாக்கும் அடர்த்தியான கொழுப்பு உடலில் இல்லாது போவதால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இஸ்ரவேலின் நெகேவ் நகரிலுள்ள பென்-குரியான் பல்கலைக்கழகம், வகை-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 224 பேரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கு உட்படுத்தியது.

இவர்களை விருப்பமான மத்திய தரைக்கடல் பகுதி சார்ந்த உணவுடன் இரு பாகமாக பிரித்து, ஒவ்வொரு இரவும் ஐந்து அவுன்ஸ் தண்ணீரோ அல்லது சிவப்பு வைனையோ அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இரு ஆண்டுகள் கழித்து பார்த்ததில், இதில் தண்ணீரைப் அருந்தியவர்களை காட்டிலும் சிவப்பு வைனை பருகியவர்கள் சிறப்பான தூக்கம், சீரான ஜீரண சக்தி மட்டுமல்லாது இதயத்தைப் பாதுகாக்கும் அடர்த்தியான கொழுப்பும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, ஐந்து அவுன்ஸ் வைன், உடல் நலத்தைப் பாதுகாத்து வைத்தியர்களை அணுக வேண்டிய தேவையைக் குறைக்கும் என இந்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்?

admin

இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்…..

sangika sangika

விலைமதிப்பில்லாத உயிரை பாதுகாத்துக்கொள்ளுங்கள் – உணவிற்கு பின்னர் சுடுநீர் அருந்த வேண்டியதன் அவசியம்…

admin

Leave a Comment