எடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி?

இது இப்படித்தான்! ஃபிட்னஸ் ட்ரெயினர் ஜெயக்குமார்…

”இரு வகை உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஒன்று எடை மிகுந்த உபகரணங்களை வைத்துச் செய்யும் வெயிட் ட்ரெயினிங் பயிற்சி. இது ஆண்களுக்கு தசைகளை வலுப்படுத்துவதற்கும், பெண்களுக்கு உடல் வடிவமைப்புக்காகவும் பயன்படும். இப்பயிற்சியை உடற்பயிற்சி நிலையத்தில்தான் செய்ய முடியும். இரண்டாவது புல்வெளி, கடற்கரை போன்ற இடங்களில் எந்த உபகரணமும் இல்லாமல் செய்யப்படும் ஏரோபிக் (Aerobic) பயிற்சி.

ஓடுவது, குதிப்பது போன்ற இந்த ஏரோபிக் வகை பயிற்சியில் இதயத்துடிப்பு அதிகமாகும் அளவு பயிற்சி செய்வார்கள். அதனால் இதை ‘கார்டியோ பயிற்சி’ என்கிறோம். இதயத்துடிப்பு அதிகமாகும் அளவு உடற்பயிற்சி செய்யும்போது தனக்குத் தேவைப்படும் சக்தியைக் கொழுப்பில் இருந்து உடம்பு எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் எடை குறைவதோடு இதயத்தின் ஆரோக்கியம், ரத்த ஓட்டம் போன்றவையும் மேம்படும்.

எடையை குறைக்க விரும்புகிறவர்கள் இந்த இரு வகை பயிற்சிகளையும் கலந்து செய்வதே சிறந்தது. எடைப் பயிற்சி 3 நாள், ஏரோபிக் பயிற்சி 3 நாள் என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். உடற்பயிற்சியை முறையான கவுன்சலிங்குடன் தொடங்குவதுதான் புத்திசாலித்தனம். ஏனெனில், அதீத பயிற்சி செய்யும்போது, உயர் ரத்த அழுத்தம் உள்ளவருக்குத் திடீரென இதயம் நின்றுபோகும் அபாயம் உண்டு. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் டாக்டரிடமோ, பயிற்சியாளரிடமோ ஆலோசனை பெற்றுத் தொடங்குவதே பாதுகாப்பானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *