இயற்கை மருத்துவம்

இதய நோய்கள் வராமல் தடுக்கும் சோற்றுக் கற்றாழை

கற்றாழை பொதுவாக சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, ரயில் கற்றாழை (அ) ராகாசி மடல் என பல பிரிவுகள் உண்டு. அவற்றுள் சோற்றுக் கற்றாழையே நமக்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது.

சோற்றுக் கற்றாழையில் அத்தியாவசியமான வைட்டமின்களான ஏ,சி, இ, போலிக் ஆசிட், கோலின் பி1, பி2, பி3 (நியாசின்), பி6 மற்றும் பி12 ஆகியன அடங்கியுள்ளன. மேலும் அமினோ ஆசிட்களும், சோற்றுக் கற்றாழையில் நிறைந்துள்ளன.

புரோட்டின் உற்பத்திக்காக உதவுவது அமினோ ஆசிட்களே. உடல் நலனுக்குத் தேவையானது எனக் கண்டறியப்பட்ட 22 அமினோ ஆசிட்களில் 8 முக்கியமானவை உட்பட 20 வகைகள் சோற்றுக் கற்றாழையில் அடங்கியுள்ளன.

அத்தோடு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், செம்பு, மாங்கனீசு போன்ற தாதுப் பொருள்களும் செரிந்துள்ளன. சோற்றுக் கற்றாழை புறநிலை மாறுதல்களுக்கு ஏற்ப உடலை பக்குவப்படுத்தி (அடாப்டோஜன்) நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

உடல் உள்ளுறுப்புகளைத் தூண்டி நோயை எதிர்க்கச் செய்கிறது. அஜீரணமே பல நோய்களுக்கு வித்தாகிறது என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒழுங்காக வேலை செய்யும் ஜீரண உறுப்புகளே ஆரோக்கிய வாழ்வுக்கான அடித்தளமாகும்.

சோற்றுக் கற்றாழையை உள்ளுக்கு சாப்பிடுவதால் குடல் பகுதி சுத்தமாவதோடு மென்மையும், குளிர்ச்சியும் பெறுகிறது. இது ஒரு ஆரோக்கிய சமனியாக (அடாப்டோஜன்) செயல்பட்டு வயிற்றுப் போக்காகிலும் சரி மலச்சிக்கலாகிலும் சரி அதை ஒழுங்குபடுத்துகிறது.

இன்றைய நவ நாகரீக உலகில் வயிற்று எரிவு என்னும் நோய் மற்றும் அமிலச் சத்து எதிர்ப்பாடு (ஆசிட் ரிஃப்ளக்ஸ்) என்னும் நோய் ஆகியவற்றால் பெரும்பாலோர் அவதிப்படுகின்றனர். சோற்றுக் கற்றாழை மேற்கூறிய நோய்களுக்கு மாபெரும் நிவாரணம் தருவதாக அமைகின்றது.

வயிற்றிலுள்ள நச்சுக்களையும் தேவையற்ற கிருமிகளையும் அது போக்குவதாக உள்ளது. வயிற்றுப் புழுக்களை வெளித்தள்ள உதவுகிறது. குடலில் படிந்துள்ள நச்சுக்களைத் துடைத்து மலத்தோடு வெளித்தள்ள உதவுகிறது.

சோற்றுக் கற்றாழையில் 80 சதவிதம் ஆல்கலைன் சத்துக்கள் இருப்பதால் உடலில் அமிலச்சத்து தேங்குவதை குறைக்க உதவுகிறது. சோற்றுக் கற்றாழை இதயத்துக்கு பாதுகாப்பானது. இதிலுள்ள “பீட்டா சிட்டோஸ்டிரால்ஸ்” கொழுப்புத் சத்தை குறைக்க வல்லது.

ரத்த அழுத்தத்தை சமப்படுத்தி, ரத்த ஓட்டத்தை பலப்படுத்தி, ரத்தத்துக்கு போதிய பிராண வாயுவை ஏற்படுத்தி, ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தைக் கரைத்து, ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையை குறைத்து இதய நோய்கள் வரா வண்ணம் பயன் தருகின்றது.

இதிலுள்ள “ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. சோற்றுக் கற்றாழை காய்ச்சலைத் தணிக்கும் அல்லது போக்கும் வல்லமை வாய்ந்தது. சோற்றுக் கற்றாழை மேல் பூச்சாக உபயோகப்படும் போது கிருமி நாசினியாக (டிஸ் இன்பெக்டன்ட்), நோய்த் தணிப்பானாக (ஆன்டி பயாடிக்),

நுண்கிருமிக் கொல்லியாக (ஆன்டி மைக்ரோபியல்) புழுக்கொல்லியாக (ஜெர்மிசிடல்), பூஞ்சக் காளான் போக்கியாக (ஆன்டிஃபங்கல்) தொற்று நோய்ப் போக்கியாக (ஆன்டி வைரஸ்) எனப் பலவகைகளில் பயன்படுகிறது. வீக்கத்தைக் குறைக்க கூடியதாக இது பயன் தருகிறது. வலி நிவாரணியாகவும் (அனால்ஜசிக்) இது உபயோகப்படுகிறது.

Related posts

முதுகு வலி, கழுத்து வலியை குணமாக்கும்

admin

மூல நோயிலிருந்து முற்றிலும் குணம் தரும் கருணைக்கிழங்கு

admin

ருசியான உளுந்து வடை

sangika sangika

Leave a Comment