ஆமவாத ஜுரம்

ஆமவாதம் இந்த ஜுரம் பெரும்பாலும் சிறுவர்களையும் இளவயது உடையவர்களை தாக்கும். நான்கு வயதிலிருந்து 18 வயது வரை உள்ளவர்களை தான் பொதுவாக இந்த ஜுரம் பாதிக்கிறது.
மூட்டுக்களை மற்றுமின்றி, இதயத்தையும் பாதிக்கும் ருமாடிக் ஜுரம், தொண்டையில் ஸ்ட்ரெப்டோகாகல் Streptococcal  தொற்றால் ஆரம்பிக்கிறது. இந்த பாக்டீரியாவால் உண்டாகும் அழற்சி, வீக்கம் இவற்றுக்கு எதிராகத் தான் ருமாடிக் ஜுரம் உண்டாகிறது. பல பேர் இந்த ஜுரத்திலிருந்து மீண்டாலும் சிறுபான்மையோரின் இருதயம் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். தவிர ஜுரம் மீண்டும்  தோன்றலாம்.

ஆமவாத ஜுரம்

காரணங்கள் / அறிகுறிகள்

ஆமவாத ஜுரம் உடலின் பல பாகங்களை – மூட்டுகள், இருதயம், தோல் – தாக்கும். தொண்டை பாதிப்பு தொடங்கி ஒய்ந்தவுடன், குளிர், பின் ஜுரம் இவை முதல் அறிகுறிகள். மூட்டுகள் சிவந்து, சூடாகி, வீக்கமடையும். நீர் கோர்த்துக் கொள்ளும். மார்பு வலி, அதிக இதய துடிப்பு, தூக்கிப்போடுதல் ஏற்படும்.

மூட்டுவலி மிதமாகவும் இருக்கலாம் இல்லை தீவிரமாக இருக்கலாம். ஒரு மாதம் வரை நீடிக்கலாம். சில சிறுவர்களுக்கு வேகமான இதயத்துடிப்பு, வேறு சிலருக்கு மார்வலி ஏற்படும். இதய பாதிப்பினால் களைப்பு மூச்சுத்திணறல், வாந்தி, பிரட்டல், வயிற்றுவலி, இருமல் இவை தோன்றும்.
ஆமவாத ஜுரம் இதய வால்வுகளை சீரழிக்கும். மூட்டுக்கள் மரத்துப் போய் வலி இருக்கும். ஜுரம் 39.4 டிகிரி சென்டிகிரேட் இருக்கும். பசி இருக்காது. மலச்சிக்கல் இருக்கும்.
சூடான ஒத்தடம் மூட்டு வீக்கம், வலியை குறைக்கும். மணல் (அ) உப்பை சிறு மூட்டை போல் துணியில் கட்டி, சூடாக ஒத்தடம் கொடுக்கலாம். பெருங்காயம் கலந்த மருந்துகள், ஆமவாதாரி ரஸ், சௌபாக்கிய வடி, போன்ற பல ஆயுர்வேத மருந்துகள் குணமளிக்கும். உணவில் பாகற்காய் சேர்த்துக் கொள்வது பயனளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *