இயற்கை மருத்துவம்

வரகு அரிசியில் உள்ள சத்துக்கள்

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும்.

அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.  வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன.

தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால், தொண்டையில் அடைத்துக் கொண்டு ஒருவிதமான அலர்ஜி உண்டாகும்.

100 கிராம் வரகு அரிசியில் 8.3 கிராம் புரதம், 9 கிராம் நார்ச்சத்து, 0.5 மி.கி. இரும்பு சத்து, 27 மி.கி. சுண்ணாம்பு சத்து உள்ளது.

மருத்துவ பயன்கள் :

* சர்க்கரை அளவை குறைக்கிறது.

* மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.

* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு

* மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

Related posts

இதோ பச்சை மிளகாய் பற்றிய சில உண்மைகளும் பயன்களும்!…

sangika sangika

ஒலிவ் ஒயிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

admin

தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வர…!

admin

Leave a Comment