இயற்கை மருத்துவம்

ஆண்மைக்கு பலம் சேர்க்கும் கொள்ளு: ஆண் மலட்டுத்தன்மையை நீக்கும்

கொள்ளு என் பதை முந்தைய கொள்ளு ரெஸிபி கட்டுரையில் படித்தோம். கொள்ளுவின் மருத்துவ குணங்களைப் பட்டியலிட்டால்சொல்லிக்கொண்டே போகலாம்.

சளியையும் காய்ச்சலையும் விரட்டும் கொள்ளு:
உடல்குளிர்ச்சியால் இருமல், சளி உபாதை உள்ளவர்கள் கொள்ளை சூப் வைத்து குடித்தால் இருமல், சளி குறையத்தொடங்கும். மாத்திரைகளின் றியே இந்த உபாதையை விரட்டும் கொள்ளு பாட்டிகால வைத்தியங்களில் ஒன்று. காய்ச்சலால் சோர்வுற்றவர்கள் கொள்ளை சாப்பிட்டால் அதீத பலத்துடன் நடமாடுவார்கள். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பொருத்தமான கை வைத்தியம். எலும்புக்கும் நரம்புக்கும் வலு சேர்க்கும் கொள்ளு உணவுகளை நாள்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத் துக்களை ஈடு செய்ய கொள்ளு ரசம், கொள்ளு சூப் உதவுகிறது.

இயற்கையாக உடல் பருமனைக் குறைக்கும் கொள்ளு:
உடல்பருமனுக்காக டயட், கடுமையான உடற்பயிற்சி என்று வருத்திக்கொண்டால் தான் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப் பட்டு உடல் பருமனை குறைக்க முடியும். ஆனால் உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்கவிரும்புபவர்கள் இரவில் ஒரு பிடி கொள்ளை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து, கொள்ளை அப்படியே அல்லது சுண்டலாக்கி சாப்பிட்டு வந்தாலே நாள டைவில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். கொள்ளை முளைகட்டியும் சாப்பிடலாம். கொள்ளில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடையை அதிகரிக்காது. அதே நேரம் கார்போ ஹைட்ரேட் நிறைந்திருப்பதால் சக்தியும் இருக்கும்.

மாதவிடாய் காலங்களில் சத்துகள் கொடுக்கும் கொள்ளு:
ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக வெள்ளைப்போக்கு, பிரசவ கால அழுக்கு போன்ற பிரச்னை களுக்கு தீர்வு தரும் அருமருந்தாக கொள்ளு செயல் படுகிறது. பருவ வயதுடைய பெண்கள் கொள்ளை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது நல்லது. இதில் அதிகளவு இரும்புச்சத்து இருப்ப தால் மாதவிடாய் களைப்பை நீக்கும். அதிக இரத்தப்போக்கு உண்டாகும் போது உடலில் இழக்கும் சத்துக்களை ஈடு செய்கிறது கொள்ளு உணவு கள். வலியால் அவதிப்படுபவர்களுக்கு சக்தி இழப்பும் சேர்ந்து அதிக சோர்வை உண்டாக்குவதால் கொள்ளு உணவை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் முன்னோர்கள்.அதே நேரம்மாதவிடாய் காலங்கள் தவிர மற்ற நேரங்களில் மட்டுமே கொள்ளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்மைக்கு பலம் சேர்க்கும் கொள்ளு:
கொள்ளில் இரும்புச்சத்து உடன் பாஸ்பரஸ், கால்சியம், புரதம் போன்ற சத்துக்களும் உண்டு.விந்து எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் கொள்ளு உணவை சேர்த்து வந்தால்விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.ஆண் மலட்டுத்தன்மையை நீக்கும் பக்கவிளைவில்லாத உணவுபொருள் கொள்ளு.

சிறுநீரக பாதுகாப்பு:
கொள்ளை ஊறவைத்து அந்த நீரை குடித்தால் உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கற்கள் உண்டாகாமால் இருக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் இவற்றில் இருக்கும் இரும்புச்சத்தும், பாலிபினால் என்னும் வேதிப்பொருள்களும் செயல்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று கால்சியம் ஆக்சலேட் என்னும் சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கரைக்க கொள்ளு உதவுவதாக தெரிவித்திருக்கிறது.

நீரிழிவு கட்டுப்படுத்துவதிலும் கொள்ளு:
கொள்ளில் ஹைப்பர்- கிளைசீமிக் எதிர்ப்பு வேதிப்பொருளும், இன்சுலின் எதிர்ப்பு தன்மையைக் குறைக்கும் வேதிப்பொருள்களும் அதிகமாக இருக்கின்றன. கொள்ளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது உணவில் கொள்ளு சேர்த்து வந்தால் இன்சுலின் சுரப்பு அதிகரித்து நீரிழிவு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு நிச்சயம் பலன் தரும்.

இவை தவிர கண் சம்பந்தமான பிரச்னைகள், உடலில் இருக்கும் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்புகள் கரைய, செரிமான பிரச்னைகள் தீர்ந்து எளிதில் செரிமானமாக, தாதுவைப் பலப்படுத்த என பலவகைகளில் உடலுக்கு பயன் தருகிறது கொள்ளு. இது உஷ்ணமிக்க தானியம் என்பதால் எற்கனவே உடல் உஷ்ணம் பெற்றவர்கள் வாரம் இருமுறை உணவில் கொள்ளு சேர்த்து வருவது நல்லது. மழைக் காலங்கள், குளிர் காலங்களில் அனைவருக்கும் ஏற்ற உணவு கொள்ளு.

Related posts

உடலின் ஆற்றலை அதிகரிக்க சிறப்பான வழிகள்!!!

admin

இருமலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்

admin

ஜீரணசக்தி அதிகரிக்க கட்டாயம் இத படிங்க!…

sangika sangika

Leave a Comment