ஆயுர்வேத மருத்துவம்

நோயில்லா நீடித்த வாழ்க்கை பெற கடுக்காய்!…

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை, கடுக்காய்க்கு உண்டு என்கிறார் திருமூலர். நாம் அன்றாடம் உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், தேவையான துவர்ப்பை பெறலாம்.

கடுக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதில் தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு தேக்கரண்டி அளவு இரவு படுக்கும் முன்பு சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீடித்த வாழ்க்கை பெறலாம்.

கண்பார்வை கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள்,வாய்ப்புண், தொண்டைப் புண், இரைப்பை புண், குடற் புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், சிறுநீர் குழாய்களில் உண்டாகும் புண், சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், பவுத்திர கட்டி, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டு வலி, உடல் பலகீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறு போன்ற அனைத்திற்கும் அருமருந்தே கடுக்காய்.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நடுப்பகல் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து கடுக்காயை இரவினில் சாப்பிட்டுவர பழகிக் கொள்ளுங்கள் பெரும்பாலான நோய்கள் உங்களை அண்டாது.

திரிபலா: திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்தோன்றி காய் ஆகிய மூன்றின் சம அளவு கலந்ததுதான். இதனை யார் வேண்டுமானாலும், அளவோடு சாப்பிடலாம்.

இந்த மருந்தை காலை, இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைத்து கொள்ளலாம்.

Related posts

தக்காளியின் விதைகள் கொண்டுள்ள பல்வேறு அற்புத நன்மைகள்….

sangika sangika

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்!….

sangika sangika

குடல்புண் என்கிற அல்சரை குணமாக்க இத சாப்பிடுங்கள்!…

sangika sangika

Leave a Comment